இலங்கை அரசுத்தலைவர்களின் பட்டியல்
இலங்கை அரசுத்தலைவர்களின் பட்டியல் (list of Presidents of Sri Lanka) 1972 ஆம் ஆண்டில் இலங்கை குடியரசாக அறிவிக்கப்பட்ட பின்னர் பதவிக்கு வந்த குடியரசுத் தலைவர்கள், மற்றும் நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத் தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய இலங்கை சனாதிபதிகளின் முழுமையான விபரம் ஆகும்.
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசுத்தலைவர் (சனாதிபதி) | |
---|---|
வாழுமிடம் | அலரி மாளிகை |
நியமிப்பவர் | மக்கள் வாக்கெடுப்பு |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள், 2 தடவைகள் போட்டியிடலாம் |
முதலாவதாக பதவியேற்றவர் | ஜே. ஆர். ஜெயவர்தனா |
உருவாக்கம் | 4 பெப்ரவரி 1978 |
இணையதளம் | www.president.gov.lk |
சனாதிபதிகள்
- கட்சிகள்
ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி சுயேட்சை (அரசியல்வாதி)
# | பெயர் | படம் | பதவி ஏற்பு | பதவி விலகல் | அரசியல் கட்சி | குறிப்பிடத்தக்க நிகழ்வுகளும் சாதனைகளும் | |
---|---|---|---|---|---|---|---|
1 | வில்லியம் கொபல்லாவ (1897–1981) |
22 மே 1972 | 4 பெப்ரவரி 1978 | கட்சி இல்லை | கோபல்லாவை கடைசி மகாதேசாதிபதியும், 1972 இல் இலங்கை குடியரசாக அறிவிக்கப்பட்டு பெயரும் சிறீ லங்கா என மாற்றப்பட்ட பின்னர் பதவிக்கு வந்த முதலாவது நிறைவேற்றதிகாரமற்ற சனாதிபதியும் ஆவார். | ||
2 | ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (1906–1996) |
4 பெப்ரவரி 1978 | 2 சனவரி 1989 | ஐக்கிய தேசியக் கட்சி | 1978 இல் ஜெயவர்தனா நிறைவேற்றதிகார அரசுத்தலைவர் முறைமையை கொண்டு வந்தார். இவரே முதலாவது அரசுத்தலைவரும் ஆவார்.[1] | ||
3 | ரணசிங்க பிரேமதாசா (1924–1993) |
2 சனவரி 1989 | 1 மே 1993 | ஐக்கிய தேசியக் கட்சி | பிரேமதாசா 1993 மே நாள் ஊர்வலத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். | ||
4 | டிங்கிரி பண்டா விஜயதுங்கா (1916–2008) |
2 மே 1993 | 12 நவம்பர் 1994 | ஐக்கிய தேசியக் கட்சி | அரசுத்தலைவர் பிரேமதாசா கொல்லப்பட்ட பின்னர், விஜயதுங்க அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். | ||
5 | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (1945–) |
12 நவம்பர் 1994 | 19 நவம்பர் 2005 | இலங்கை சுதந்திரக் கட்சி (மக்கள் கூட்டணி) |
சந்திரிக்கா குமாரதுங்க பல முறை படுகொலைத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டார். ஆனாலும் அத்தாக்குதல்கள் எவையும் வெற்றி பெறவில்லை. | ||
6 | மகிந்த ராசபக்ச (1945–) |
19 நவம்பர் 2005 | 8 சனவரி 2015 | இலங்கை சுதந்திரக் கட்சி (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி) |
25-ஆண்டுகால ஈழப்போர் இவரது காலத்தில் முடிவுக்கு வந்தது. போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டன. இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதினெட்டாவது திருத்தம், 2015 தேர்தலில் தோல்வி. | ||
7 | மைத்திரிபால சிறிசேன (1951–) |
8 சனவரி 2015 | 18 நவம்பர் 2019 | இலங்கை சுதந்திரக் கட்சி (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி) |
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் 2015 தேர்தலில் வெற்றி. |
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ "Former Sri Lanka president dies, leaves mixed legacy". CNN. 1 நவம்பர் 1996. http://www.cnn.com/WORLD/9611/01/sri.lanka.obit/index.html?iref=newssearch. பார்த்த நாள்: 4 அக்டோபர் 2008.[தொடர்பிழந்த இணைப்பு]
- "Official Website of the President of Sri Lanka." இம் மூலத்தில் இருந்து 25 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110725214707/http://www.president.gov.lk/. பார்த்த நாள்: 15 September 2009.
- "Handbook of the Parliament – Heads of State" (in English). http://www.parliament.lk/handbook_of_parliament/heads_of_state.jsp. பார்த்த நாள்: 15 September 2009.