இலக்கியத்திறன் (நூல்)

இலக்கியத்திறன் என்பது மு. வரதராசன் இயற்றிய நூல். இதில் விஞ்ஞானத்தினோடு இலக்கியத்தின் ஒப்பீடு, இலக்கியத்தின் தேவை, வகைகள், திறமைகளை எவ்வாறு கலைஞர்கள் இலக்கியம் படைக்கிறார்கள் என்பது போன்ற பல தகவல்களை உள்ளடக்கியுள்ளார்.

உருவான வரலாறு

"1945ஆம் ஆண்டு அக்டோபர் 18, 22 ஆகிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் (ஆனரரி ரீடர் என்ற முறையில்) சிறப்புச் சொற்பொழிவாகத் 'தமிழில் இலக்கிய ஆராய்ச்சி' என்னும் பொருள் பற்றிப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழ் எம்.ஏ வகுப்புக்கு அப்பொருள் பற்றி விரிவுரைகள் நிகழ்த்துவதற்கு அப்பேச்சுக் குறிப்புகளைத் திரும்ப நோக்கினேன். அவற்றை விரிவுபடுத்தி ஒரு நூலாக்க முயன்றேன். இம்முயற்சியை தமிழகம் வரவேற்கும் என நம்புகிறேன். இதற்கு அடிப்படையாக அமைந்த அச்சொற்பொழிவினை நிகழ்த்தப் பணித்துப் பின்னர் அதனை வெளியிட்டுக் கொள்ள உரிமையும் நல்கிய பல்கலைக்கழகத்தினரின் உதவியை நன்றியுடன் போற்றுகிறேன்."
- மு.வ.[1]

பொருளடக்கம்

இந்நூலினை பத்து பிரிவுகளாக உள்ளடக்கி மு.வ. வெளியிட்டுள்ளார்.[2]

  1. அறிவியலும் கலையும்
  2. கலைகள்
  3. கலைஞர்
  4. இலக்கியம்
  5. உணர்ச்சி
  6. கற்பனை
  7. வடிவம்
  8. உணர்த்தல்
  9. நுகர்தல்
  10. ஆராய்ச்சி

உசாத்துணை

  1. மு. வரதராசனின் "இலக்கியத்திறன்" நூலிலிருந்து (பக்கம்: 3)
  2. மு. வரதராசனின் "இலக்கியத்திறன்" நூலிலிருந்து (பக்கங்கள்: 282-284)
"https://tamilar.wiki/index.php?title=இலக்கியத்திறன்_(நூல்)&oldid=19879" இருந்து மீள்விக்கப்பட்டது