இர. சா. சண்முகம்
இர. சா. சண்முகம் (பிறப்பு: சூலை 19 1939) மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இர. சா. இளமுருகு எனும் புனைப்பெயரால் நன்கறியப்பட்ட இவர் அச்சகப் பணியாளர்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1955 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இவரின் சிறுகதைகள், கட்டுரைகள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன. அத்துடன் மேடை நாடகம் எழுதி அரங்கேற்றியுள்ளார்.
நூல்கள்
- "மலர் மங்கை" (தொகுப்பாசிரியர்).
பரிசுகளும் விருதுகளும்
- டத்தோ ஸ்ரீ சாமிவேலுவின் 50-வது பிறந்த நாள் கட்டுரைப் போட்டியில் இரணடாம் பரிசு (1987);
- முருகு சுப்பிரமணியன் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (2002).