இரெ. சண்முகவடிவேல்
இரெ. சண்முகவடிவேல் (Re. Shanmuga Vadivel) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள திருவாரூர் நகரத்தைச் சேர்ந்த ஒரு பட்டிமன்றப் பேச்சாளர் ஆவார். தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று, நற்றமிழ்ப் புலவராக இவர் பட்டிமண்டபங்களில் தமிழ் வளர்த்து வருகிறார்.[1] பெற்ற அனுபவங்களை நகைச்சுவையாக எடுத்துக்கூறி இலக்கிய சொற்பொழிவாற்றுவதும், இலக்கியங்களில் பொதிந்து கிடக்கும் ஆழமான கருத்துகளை உள் வாங்கிக் கொண்டு இயல்பாக வெளிப்படுத்துவதும் இவருடைய பலமாகும்.
இரெ. சண்முக வடிவேல் | |
---|---|
பிறப்பு | 25.08.1937 நாகூர், தமிழ்நாடு |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | பட்டிமன்ற பேச்சாளர், எழுத்தாளர் |
பணியிடங்கள் | தமிழாசிரியர், திருவாரூர் வா. சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. |
கல்வி கற்ற இடங்கள் | சென்னைப் பல்கலைக் கழகத்தில் புலவர், முதுநிலை, மூதறிஞர் பட்டங்கள் |
விருதுகள் | தமிழ்ச்செம்மல் விருது |
துணைவர் | தையல்நாயகி |
பிள்ளைகள் | பரிமளா |
இலங்கை கம்பன் கழகம், கொழும்பு யாழ்ப்பாண கம்பன் கழகம், யாழ்ப்பாணம் பிரான்சு கம்பன் கழகம், பாரிசு சுவிசு திருவள்ளுவர் மன்றம், சுவிட்சர்லாந்து ஆத்திரேலியன் கம்பன் கழகம், சிட்னி மக்கள் மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் அழைப்பின் பேரில் பல நாடுகளுக்கும் சென்று வெளிநாட்டு மேடைகளிலும் இவர் இலக்கியச் சொற்பொழிவாற்றியுள்ளார்.[2] தமிழ்ச்செம்மல் விருது [3][4] பெற்ற இவர் முன்னதாக இராதா கிருட்டிணன் விருது, முத்தமிழ் முரசு விருது, நகைச்சுவை சித்தர் விருது, நகைச்சுவை இமயம் விருது எனப் பலவிருதுகளையும் பெற்றுள்ளார். திருவாரூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.[5]
வாழ்க்கைக் குறிப்பு
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூர் நகரில் ப. இரெத்தினசாமி, இரெ. கோவிந்தம்மாள் தம்பதியருக்கு மகனாக 1937 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 25 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். நாகூர் தேசிய உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற சண்முகவடிவேல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் புலவர், முதுநிலை, மூதறிஞர் பட்டங்களை பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளம் கல்வியியல் பட்டம் பெற்று திருவாரூர் வா. சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 36 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
பாராட்டும் விருதுகளும்
சொல்வேந்தர் சுகி சிவம் ஏற்பாட்டில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா, பேராசிரியர்கள் பா. நமச்சிவாயம், சோ.சத்யசீலன், அறிவொளி, செல்வகணபதி, இராசாராம், இராசா மற்றும் வழக்கறிஞர் சுமதி போன்ற தமிழறிஞர்கள் திருவாரூரில் கூடி விழா எடுத்து சண்முகவடிவேலுக்கு நகைச்சுவைத் தென்றல் என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தனர்.
தமிழக அரசு 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதை வழங்கி சிறப்பித்தது.[6][7] சென்னைக் கம்பன் கழகம் இவருக்கு இராதா கிருட்டிணன் வழங்கி சிறப்பித்துள்ளது. தமிழாசிரியர் கழகம் நற்றமிழ் நல்லாசான் என்ற விருதையும், குழந்தை கவிஞர் பேரவை முத்தமிழ் முரசு என்ற விருதையும் இவருக்கு வழங்கியுள்ளன. சொல்வேந்தர் என்று அழைக்கப்படும் சுகி சிவம் நகைச்சுவை சித்தர் என்று விருது வழங்கி போற்றியுள்ளார். புவனகிரி தமிழ் இலக்கியப் பேரவை இவருக்கு இலக்கிய நகைச்சுவை இமயம் என்ற விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
எழுதிய நூல்கள்
- வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க[8]
- தமிழ் வளர்த்த சான்றோர்
- நானிலம் போற்றும் நால்வர்
- குறள்வழிக் கதைகள்
- வாய்விட்டு சிரிக்கிறார் வள்ளுவர்
- திருக்குறள் கதை அமுதம்
- செவிநுகர் சுவைகள்
- அண்ணாவின் வாழ்வில் அரிய நிகழ்ச்சிகள்
- பெரியபுராணத்தில் பெண்ணின் பெருமை
- இருபத்தி ஓராம் நூற்றாண்டுக்கு இளங்கோவடிகள்
- குறுந்தொகை நலம்
- துளித்துளியாய் பொது அறிவு[9]
மேற்கோள்கள்
- ↑ Jangir, Suresh K. (2022-12-21). "செங்கல்பட்டில் புத்தக திருவிழா வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது" (in ta). https://www.maalaimalar.com/news/district/tamil-news-book-fair-started-on-28-in-chengalpattu-551373.
- ↑ "கண்ணதாசன் நினைவில் கால்நூற்றாண்டு காலமாக விழா". தினகரன். https://archives.thinakaran.lk/Vaaramanjari/2013/08/11/?fn=f1308115. பார்த்த நாள்: 6 August 2023.
- ↑ "திருவாரூர் பட்டிமன்ற பேச்சாளருக்கு தமிழ்ச்செம்மல் விருது". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2022/dec/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-3968050.html. பார்த்த நாள்: 6 August 2023.
- ↑ "தமிழ்ச்செம்மல், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள்:முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2022/dec/21/tamil-semmal-best-translator-awards-presented-by-chief-minister-stalin-3970823.html. பார்த்த நாள்: 6 August 2023.
- ↑ Editor, Tamilmani (2023-07-12). "புதுக்கோட்டையில் ஜூலை 14 முதல் 23 வரை கம்பன் பெருவிழா…" (in ta-IN). https://tamilmani.news/literature/185435/.
- ↑ தினத்தந்தி (2022-12-22). "டெல்லி பல்கலைக்கழக தமிழ் துறைக்கு ரூ.5 கோடி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்" (in ta). https://www.dailythanthi.com/News/State/delhi-university-tamil-department-rs5-crore-chief-minister-mkstalin-862956.
- ↑ "டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் இலக்கிய துறை தொடங்க ரூ.5 கோடி நிதி: துணைவேந்தரிடம் ஸ்டாலின் வழங்கினார்" (in ta). 2022-12-22. https://www.hindutamil.in/news/tamilnadu/918059-5-crore-fund-to-start-literature-department.html.
- ↑ "வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க – Vaazhkai Romba Sulabamunga – இரா. சண்முகவடிவேல் – கற்பகம் புத்தகாலயம் – Karpagam Puthakalayam" (in en-US). https://www.noolulagam.com/product/.
- ↑ "அருணாவின் துளித்துளியாய் பொது அறிவு /டி. எம். சண்முக வடிவேல். Aruṇāvin̲ tuḷittuḷiyāy potu ar̲ivu /Ṭi. Em. Caṇmuka Vaṭivēl. – National Library". https://www.nlb.gov.sg/biblio/200159138.