இரா. மாணிக்கவாசகம்

இரா. மாணிக்கவாசகம் (பிறப்பு: 1943) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சித்த மருத்துவம் பயின்றவர். திருவருட்பா, திருமந்திர ஆராய்ச்சி மூலம் ஆய்வுப் பட்டம் (முனைவர்) பெற்றவர். சித்தர்கள் பற்றிய 10க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிப் பதிப்பித்தவர். இவர் எழுதிய மாற்று மருத்துவங்கள் பகுதி 1, 2, 3, 4” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மருந்தியல், உடலியல், நலவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

"https://tamilar.wiki/index.php?title=இரா._மாணிக்கவாசகம்&oldid=3365" இருந்து மீள்விக்கப்பட்டது