இரா. துரைமாணிக்கம்

இரா. துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார்.

தொழில்

தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர் வானொலியில் சமூக நேரம் எனும் நிகழ்ச்சியையும் நடத்தியுள்ளார்.

வகித்த பதவிகள்

சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் பொருளாளராகவும், தமிழர் பிரதிநிதித்துவ சபை மற்றும் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கச் செயலவை உறுப்பினராகவும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் பொருளாளராகவும் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இதழாசிரியராக

இவர் கொள்கை முழக்கம், மாணவர் பூங்கா போன்ற இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 1997ல் தமிழாசிரியர் சங்கம் வெளியிட்ட தமிழாசிரியர் குரல் எனும் இதழின் ஆசிரியரும் இவரே.

இலக்கியப் பணி

வேம்பரசன் எனும் புனைப்பெயரில் சிறுகதை, கவிதை, நாடகம் ஆகிய துறைகளில் எழுதிவரும் இவரின் முதல் ஆக்கம் 1958ல் மாணவர் மணிமன்ற மலரில் வெளியானது.

எழுதியுள்ள நூல்

  • காலம் கடந்துவிட்டது
  • வளர்பிறை

உசாத்துணை

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://tamilar.wiki/index.php?title=இரா._துரைமாணிக்கம்&oldid=3340" இருந்து மீள்விக்கப்பட்டது