இரா. சங்கரன்
இராமரத்தினம் சங்கரன் (Ra. Sankaran, 12 சூன் 1931 – 14 திசம்பர் 2023),[1] பிரபலமாக ரா. சங்கரன் என அழைக்கப்படுபவர். ஒரு இந்திய மேடை மற்றும் திரைப்பட நடிகரும் இயக்குநரும் ஆவார். இவர் பல தமிழ் படங்களிலும், சில தெலுங்கு படங்களிலும் துணை வேடங்களில் நடித்துள்ளார். சங்கரன் திரைப்பட நடிகர் ஜாவர் சீதாராமனின் உறவினர்.[2] மௌன ராகம் திரைப்படத்தில் ரேவதியின் தந்தை சந்திரமவுலி கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெருவாரியாக அறியப்பட்டார். வயது மூப்பின் காரணமாக 2023 திசம்பர் 14 அன்று காலமானார்.[3]
ரா. சங்கரன் | |
---|---|
பிறப்பு | இராமரத்தினம் சங்கரன் சூன் 12, 1931 [1] |
இறப்பு | 14 திசம்பர் 2023 | (அகவை 92)
பணி | நடிகர், இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1974-1999 |
திரைப்படவியல்
இயக்குநர்
ஆண்டு | படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
1974 | ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு | தமிழ் | |
1975 | தேன்சிந்துதே வானம் | தமிழ் | |
1977 | துர்கா தேவி | தமிழ் | |
1977 | ஒருவனுக்கு ஒருத்தி | தமிழ் | |
1977 | பெருமைக்குரியவள் | தமிழ் | |
1977 | தூண்டில் மீன் | தமிழ் | |
1978 | வேலும் மயிலும் துணை | தமிழ் | |
1980 | குமரி பெண்ணின் உள்ளத்திலே | தமிழ் |
நடிகர்
ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | Notes |
---|---|---|---|---|
1962 | ஆடிப்பெருக்கு | தமிழ் | ||
1977 | பெருமைக்குரியவள் | தமிழ் | ||
1984 | புதுமைப் பெண் | தமிழ் | ||
1985 | ஒரு கைதியின் டைரி | ஆயர் | தமிழ் | |
1985 | பகல் நிலவு | தமிழ் | ||
1985 | பௌர்ணமி அலைகள் | தேவாலய தந்தை | தமிழ் | |
1986 | மௌன ராகம் | திவ்யாவின் தந்தை, சந்திரமௌலி | தமிழ் | |
1986 | உனக்காகவே வாழ்கிறேன் | தமிழ் | ||
1987 | கடமை கண்ணியம் கட்டுப்பாடு | தமிழ் | ||
1987 | மக்கள் என் பக்கம் | தமிழ் | ||
1989 | நியாயத் தராசு | தமிழ் | ||
1990 | எதிர்காற்று | தமிழ் | ||
1990 | ஆடி வெள்ளி | தமிழ் | ||
1990 | பொண்டாட்டி தேவை | சாந்தியின் தந்தை சங்கர் | தமிழ் | |
1990 | 13-ம் நம்பர் வீடு | சுவாமி | தமிழ் | |
1991 | தாயம்மா | தமிழ் | ||
1992 | அமரன் | தமிழ் | ||
1992 | சேவகன் | அஞ்சலியின் தந்தை சண்முகம் | தமிழ் | |
1992 | புருஷன் எனக்கு அரசன் | தமிழ் | ||
1992 | அபிராமி | தமிழ் | ||
1992 | சின்ன கவுண்டர் | வழக்கறிஞர் | தமிழ் | |
1993 | அமராவதி | தேவாலய பாதிரியார் | தமிழ் | |
1993 | ரோஜாவை கிள்ளாதே | அனுவின் தந்தை | தமிழ் | |
1994 | சின்ன மேடம் | நீதியரசர் | தமிழ் | |
1994 | அரண்மனைக்காவலன் | தமிழ் | ||
1994 | வாங்க பார்ட்னர் வாங்க | குருக்கள் | தமிழ் | |
1995 | ஜமீன் கோட்டை | தமிழ் | ||
1995 | சதி லீலாவதி | தமிழ் | ||
1996 | அந்திமந்தாரை | தமிழ் | ||
1996 | காதல் கோட்டை | தேவாலய பாதிரியார் | தமிழ் | |
1998 | பகவத் சிங் | தமிழ் | ||
1999 | அழகர்சாமி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "R.Sankaran" இம் மூலத்தில் இருந்து 8 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180808104731/http://www.nadigarsangam.org/member/r-sankaran/.
- ↑ S. Shivpprasadh (15 June 2012). "Father figure". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/article3529662.ece. பார்த்த நாள்: 10 February 2013.
- ↑ "'மிஸ்டர் சந்திரமவுலி' புகழ் நடிகர் சங்கரன் காலமானார்". தினமலர். https://cinema.dinamalar.com/tamil-news/118146/cinema/Kollywood/Actor-Sankaran-of-Mr-Chandramouli-fame-passed-away.htm. பார்த்த நாள்: 14 December 2023.