இரா. கு. ஆல்துரை
இரா. கு. ஆல்துரை (பிறப்பு: டிசம்பர் 2 1952) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நீலகிரி மாவட்டம் முத்தோரை அருகிலுள்ள கீழ்கவ்வட்டி எனும் ஊரில் பிறந்தவர். செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தில் சிறப்புநிலைத் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். பன்முகப் பார்வையர் பாவாணர், அகரமுதலி வல்லுநர் பாவாணர், அவர்தாம் பாவாணர் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். மொழியியல் சார்ந்த பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய “படகு - ஒரு திராவிட மொழி” எனும் நூல் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் எனும் வகைப்பாட்டிலும் “படகர் அறுவடைத் திருநாள்” எனும் நூல் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டிலும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.