இராம பிரபா

இரமா பிரபா (Rama Prabha) என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்துள்ளார்.[2] இவர் 1,400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் இவர் தன் ஆறு தசாப்தங்களுக்கும் மேலான தொழில் வாழ்க்கையுடன் தென்னிந்தியத் திரைப்படத்துறையில் அனைத்து தலைமுறைகளிலும் உச்ச நட்சத்திரங்களுடன் திரையில் தோன்றியுள்ள ஒரு குணச்சித்திரக் கலைஞராகப் புகழ் பெற்றார். 1970 மற்றும் 1980 களில் நகைச்சுவை நடிகர் இராஜா பாபுவுடன் தெலுங்கு திரையில் குறிப்பிடத்தக்க ஜோடியாக உருவானார்.[3] இவர் 1968 முதல் சாந்தி நிலையம் மற்றும் பல படங்களில் நாகேசுக்கு ஜோடியாக நடித்தார். இவர் இந்தியில் மெஹ்மூத் ஜோடியாக தோ பூல் படத்தில் நடித்தார்.

இராம பிரபா
Rama Prabha.jpg
கல்யாண மண்டபம் (1971) திரைப்படத்தின் ஒரு காட்சியில் இராம பிரபா
பிறப்புகே. ஜி. இராம பிரபா
5 அக்டோபர் 1946 (1946-10-05) (அகவை 78)[1]
கதிரி, அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
தேசியம்இந்தியர்
பணிநடிகை
வாழ்க்கைத்
துணை
சரத் பாபு
(தி. 1974; ம.மு. 1988)
பிள்ளைகள்விஜய சாமுண்டீசுவரி (தத்து மகள்)
உறவினர்கள்இராஜேந்திர பிரசாத் (மருமகன்)

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் ஒரு மாத குழந்தையாக இருந்தபோது, இவருடைய தந்தையின் சகோதரி தத்தெடுத்துக் கொண்டு ஊட்டிக்கு குடிபெயர்ந்தார். பிரபாவின் குழந்தைப் பருவம் 14 ஆண்டுகள் வரை அங்கேயே கழிந்தது பிறகு சென்னைக்கு இடம் பெயர்ந்தனர். தற்போது மதனப்பள்ளி அருகே உள்ள வயல்பாடு என்ற இடத்தில் வசித்து வருகிறார்.

இவர் தன் சகோதரியின் மகள் விஜய சாமுண்டேஸ்வரியை ஒரு வயது குழந்தையாக இருந்தபோது தத்தெடுத்தார். விஜய சாமுண்டி நடிகர் இராஜேந்திர பிரசாத்தை மணந்தார்.[4]

விருதுகள்

  • சிறந்த நகைச்சுவை நடிகைக்கான நந்தி விருதை லஹிரி லஹிரி லஹிரிலோ (2002) என்ற படத்திற்காக பெற்றார்.

மேற்கோள்கள்

  1. "Veteran Actress Rama Prabha about her Film Industry career | Rewind of Popular Show | Swagathaalu". https://www.youtube.com/watch?v=X7fOVuRUgrE. 
  2. Atluri, Sri (20 July 2007), "Ramaprabha – Interview", Telugu Cinema, pp. Star Interviews, archived from the original on 11 January 2012, retrieved 30 July 2013
  3. "ర‌మాప్ర‌భ కూతుర్ని పెళ్లాడింది టాలీవుడ్ టాప్ హీరోయే.. మీకు తెలుసా..! - Telugu Lives". https://telugulives.com/telugu/2022/01/tollywood-top-hero-marries-ramaprabhas-daughter-do-you-know-who-is-he/. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இராம_பிரபா&oldid=22419" இருந்து மீள்விக்கப்பட்டது