இராம. கண்ணபிரான்
இராம. கண்ணபிரான் (பிறப்பு: 1943) புகைப்படத்திற்கு நன்றி kamalagaanam-blogspot இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இராபிள்ஸ் பள்ளியில் உயர்நிலைக் கல்வியைக் கற்றார்.
தொழில்
ரோசைத் தொடக்கப் பள்ளியில் ஆங்கில மொழி ஆசிரியராகவும், பின்பு அதே பள்ளியில் தமிழ்மொழி ஆசிரியராகப் தொழிலாற்றியுள்ளார்.
வகித்த பதவிகள்
இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஆரம்ப காலச் செயலவை உறுப்பினராகவும், சிங்கப்பூர் இலக்கியக் களம், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகக் கலை மையம், தேசிய கலை மன்றம் போன்ற இலக்கிய, கலை, அரசு அமைப்புகளின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
இலக்கியப் பணி
சிறுகதை, நாவல், நாடகம், கவிதை என பல்துறைகளிலும் ஈடுபாடுமிக்க இவரின் இவரது முதல் படைப்பு ஒரு சிறுகதையாகும். இதுவரை சுமார் 60 சிறுகதைகளையும், 4 குறுநாவல்களையும், 8 நாடகங்களையும், 7 கவிதைகளையும், 35 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது இத்தகைய மலேசியா சிங்கப்பூர் தமிழ்நாடு போன்ற இடங்களிலிருந்து வெளிவரும் தமிழ் இலக்கிய சிற்றிதழ்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. மேலும் சிங்கை, மலேசியா வானொலிச் சேவைகள் இவரது சிறுகதைகளை ஒலிபரப்பியுள்ளன.
எழுதியுள்ள நூல்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
- இருபத்தைந்து ஆண்டுகள்
- உமாவுக்காக
- வாடைக்காற்று
- சோழன் பொம்மை
குறுநாவல்
- பீடம்
கட்டுரை
- சிறுகதை-கூறுகளும் செப்பனிடுதலும் (2021)
- நூல் அணிந்துரைகள் (2021)
- வானொலியில் நூல் அறிமுகங்கள் (2021)
- சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள் (2021)
- அறம் பழுத்த வாழ்வு (2021)
- இராம.கண்ணபிரான் கதைகள்
பெற்ற விருதுகளும், கௌரவங்களும்
- தமிழ் முரசு நடத்திய சிறுகதைப் போட்டியின் இரண்டாம் பரிசு
- தமிழ் நேசன் பவுன் பரிசு
- நாடோடிகள் எனும் சிறுகதைக்ககான முதல் பரிசு
- தென் கிழக்காசிய எழுத்தாளர் விருது
- மாண்ட் பிளாங்க் இலக்கிய விருது
- கலாசாரப் பதக்கம்
உசாத்துணை
- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
- போலியான ஒன்றை இலக்கியத்தின் மீது வைத்தால் அது உங்களைத் துவம்சம் செய்துவிடும் – இராம.கண்ணபிரான், சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் இராம.கண்ணபிரான் அவர்களுடன் ஒரு நேர்காணல், செராங்கூன் டைம்ஸ், டிசம்பர் 2021
- இராம கண்ணபிரானின் வாழ்வு கதைத்தொகுப்பு – ஒரு பார்வை|திண்ணை
- "சுயகற்பனையும் சிந்தனையும் வாசிப்பும் மட்டுமே இலக்கியவாதிகளை உருவாக்க முடியும்" – இராம.கண்ணபிரான் – வல்லினம்
- மனதிற்கு வயதில்லை நம்பிக்கைக்கு அளவில்லை - 77 வயது உள்ளூர் எழுத்தாளர் இராம கண்ணபிரான் (காணொளி) - Seithi Mediacorp
- நேர்காணல்: எழுத்தாளர் இராம. கண்ணபிரான் | அரூ
- Rama Kannabiran (artshouselimited.sg)
- இராம. கண்ணபிரான் – சடக்கு
- Literary Pioneer Exhibition: P Krishnan, Rama Kannabiran, Singai Ma Ilangkannan சிங்கப்பூர் எழுத்தாளர் விழா இலக்கிய முன்னோடிகளின் கண்காட்சி : பி. கிருஷ்ணன், சிங்கை மா. இளங்கண்ணன், இராம. கண்ணபிரான் (Singapore Writers' Festival 2020)
- Cultural Medallion 1998, Rama Kannabiran (இராம கண்ணபிரான்)
- Culture champs - Snapshots of the 13 Indian cultural medallion winners, tabla.com.sg, மார்ச் 2013
- இராம. கண்ணபிரான் ஆவணப்படம், வல்லினம், யூடியூப் காணொளி