இராமசாமி பரமேஸ்வரன்
மேஜர் இராமசாமி பரமேஸ்வரன் (Ramaswamy Parameswaran), பரம் வீர் சக்கரம் (13 செப்டம்பர் 1946, மும்பை – 25 நவம்பர் 1987) இந்தியாவின் மும்பை நகரத்தில் 1946-இல் பிறந்த பரமேஸ்வரனின் தந்தை பெயர் இராமசாமி ஆகும். இவர் இந்திய அரசு நடத்தும் இராணுவ அதிகாரிகளுக்கான நுழைவுத் தேர்வில் (Short Service Commission) வென்று, 16 ஜனவரி 1972 அன்று இந்திய இராணுவத்தின் மகர் ரெஜிமெண்டின் 15-வது பட்டாலியனில் இராணுவ அதிகாரியாக பணியில் சேர்ந்தார். ஈழப் போரின் போது இந்திய அமைதி காக்கும் படை இணைந்த பரமேஸ்வரன் பவான் நடவடிக்கையின் பல வீரதீர சாகசங்கள் செய்து[1], 25 நவம்பர் 1987 அன்று வீரமரணம் அடைந்தார். மேஜர் பரமேஸ்வரனின் இறப்பிறகுப் பின்னர், பரமேஸ்வரனின் வீரச் செயல்களைப் பாராட்டி, இந்தியக் குடியரசுத் தலைவர், மேஜர் பரமேஸ்வரனின் குடும்பத்தினர் மூலம் 1988-ஆம் ஆண்டில் பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[2][3]
மேஜர் இரா. பரமேஸ்வரன் | |
---|---|
பிறப்பு | மும்பை, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா | 13 செப்டம்பர் 1946
இறப்பு | 25 நவம்பர் 1987 சிறீலங்கா | (அகவை 41)
சார்பு | இந்தியக் குடியரசு |
சேவை/ | இந்திய இராணுவம் |
சேவைக்காலம் | 1972-1987 |
தரம் | மேஜர் |
தொடரிலக்கம் | IC-32907 |
படைப்பிரிவு | மகர் ரெஜிமெண்ட் இந்திய அமைதி காக்கும் படை |
போர்கள்/யுத்தங்கள் | ஈழப் போர் பவான் நடவடிக்கை |
விருதுகள் | பரம் வீர் சக்கரம் |
மரபுரிமைப் பேறுகள
- 1998-இல் சென்னை ஆற்காடு சாலையில் முன்னாள் இராணுவத்தினருக்கு கட்டப்பட்ட குடியிருப்பு காலனிக்கு மேஜர் பரமேஸ்வரின் நினைவாக மேஜர் பரமேஸ்வரன் விகார் எனப்பெயரிட்டு மரியாதை செய்யப்பட்டது.
- சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள சிறீநகர் காலனியில் இயங்கும் முன்னாள் இராணுவத்தினர் நலச்சங்க கட்டிடத்திற்கு மேஜர் பரமேஸ்வரன் மாளிகை எனப்பெயரிட்டு மரியாதை செய்யப்பட்டது.
- புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னம் வளாகத்தில் பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்களுக்கான வரிசையில் மேஜர் பரமேஸ்வரனின் மார்பளவுச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
- அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இதுவரை பெயரிடப்படாத தீவுகளுக்கு இந்திய அரசு சனவரி 2023ல் மேஜர் ராமசாமி பரமேஸ்வரன் உள்ளிட்ட பரம் வீர் சக்கர விருது பெற்ற 21 வீரத்தியாகிகளின் பெயர்கள் சூட்டி கௌரவப்படுத்தியது.[4][5]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ அந்தமானில் 'ராமசுவாமி தீவு' - மோதி அறிவித்த பரம்வீர் சக்ரா தமிழ் அதிகாரிக்கு 35 வருடத்துக்கு பிறகு கெளரவம் அந்தமானில் 'ராமசுவாமி தீவு' - மோதி அறிவித்த பரம்வீர் சக்ரா தமிழ் அதிகாரிக்கு 35 வருடத்துக்கு பிறகு கெளரவம்
- ↑ MAJ RAMASWAMY PARAMESWARAN, PARAM VIR CHAKRA (Posthumous)
- ↑ The Param Vir Chakra Winners (PVC), Official Website of the Indian Army, retrieved 28 August 2014
- ↑ PM Modi names 21 islands of Andaman and Nicobar Islands after Param Vir Chakra awardees
- ↑ அந்தமானில் பிரதமரால் பெயரிடப்பட்ட தீவுகள்: யார் யார் அவர்கள்?