இராஜஹிய விக்கிரமய

இராஜஹிய விக்கிரமய இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது ஊமைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை மேமன் இனத்தைச் சேர்ந்த கொழும்பு வர்த்தகரான ரி.ஏ.ஜி. நூர்பாய் என்பவர் 1925 ஆம் ஆண்டில் தயாரித்துள்ளார்.

இப்படத்தை இந்தியாவின் இயக்குநரான குப்தா இயக்கியிருந்தார். என். எம். பெரேரா இதில் கதாநாயகனாக நடித்தார். (என். எம். பெரேரா இலங்கையின் இடதுசாரி அரசியலில் முக்கியமானவர்களுள் ஒருவர்) அவருடன் சிவில் பீமா என்ற பறங்கி இனப் பெண் கதாநாயகியாக நடித்தார்.

இந்தத் திரைப்படத்துக்கு போதிய விளம்பரமோ, பிரபல்யமோ கிடைக்கவில்லை. இதனால் இத்திரைப்படம் வெற்றி பெறவில்லை. இருப்பினும் தயாரிப்பாளர் ரி.ஏ.ஜி. நூர்பாய் எடுத்த இந்த முதலாவது முயற்சி இலங்கையின் திரைப்பட உலகில் அழியாதது. 1920 ஆம் ஆண்டில் நூர்பாய் கொழும்பு வெள்ளவத்தையில் பிளாசா எனும் திரையரங்கையும் அமைத்துள்ளார். இத்திரையரங்கு 1983 ஆடிக்கலவரத்தில் தீக்கிரையானது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இராஜஹிய_விக்கிரமய&oldid=28472" இருந்து மீள்விக்கப்பட்டது