இராஜசிங்கமங்கலம் வட்டம்

இராஜசிங்கமங்கலம் வட்டம், அல்லது ஆர். எஸ். மங்கலம் வட்டம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இவ்வட்டத்தில் இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.இராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என கூறப்படும் சிறப்பும் ஆர். எஸ். மங்கலம் தாலுகாவிற்கு உண்டு.

தோற்றம்

திருவாடானை வட்டம் மற்றும் பரமக்குடி வட்டங்களை சீரமைத்து, இராஜசிங்கமங்கலத்தைத் நிர்வாகத் தலைமையிடமாகக் கொண்டு, இராஜசிங்கமங்கலம் வருவாய் வட்டத்தை தமிழக முதல்வர், 16 ஆகஸ்டு 2018 அன்று காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார்.[2]

உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்

இராஜசிங்கமங்கலம் வட்டம் ஆனந்தூர், சோழந்தூர், மற்றும் இராஜசிங்கமங்கலம் என மூன்று உள்வட்டங்களும், 39 வருவாய் கிராமங்களும் கொண்டது.

இராஜசிங்கமங்கலம் வட்டத்தில் இருக்கும் மொத்த ஊர்கள்

ஆனந்தூர் உள்வட்டம்

  • ஆனந்தூர்
  • ராதானூர்
  • ஆணையார்கோட்டை
  • சாத்தனூர்
  • ஒடக்கரை
  • கோவிந்தமங்கலம்
  • திருத்தேர்வளை
  • கொக்கூரணி
  • சேத்திடல்
  • வரவணி
  • செங்குடி

இராஜசிங்கமங்கலம் உள்வட்டம்

  • இராஜசிங்கமங்கலம்
  • கருங்குடி
  • கூடலூர்
  • அறுநூத்திமங்கலம்
  • கவ்வூர்
  • புல்லமடை
  • இராமநாதமடை
  • ரெட்டையூரணி வில்லடிவாகை
  • ஒடைக்கால்
  • பகவதிமங்கலம்
  • குலமாணிக்கம்
  • கள்ளிக்குடி
  • பெத்தார்தேவன்கோட்டை

சோழந்தூர் உள்வட்டம்

  • சோழந்தூர்
  • திருப்பாலைக்குடி
  • சித்தூர்வாடி
  • ஊரனங்குடி
  • உப்பூர்
  • கலங்காப்புலி
  • பாரனூர்
  • அழகர்தேவன்கோட்டை
  • தும்படைக்காகோட்டை
  • அரியாங்கோட்டை
  • ஆட்டாங்குடி
  • சீனங்குடி
  • கருங்குடி
  • துத்தியேந்தல்
  • வளமாவூர்

</ref>

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்