இராசமுறை

இராசமுறை என்பது பழைய யாழ்ப்பாணத்துச் சரித்திரத்தைக் கூறும் ஒரு நூலாகும். இது பறங்கிக்காரர் காலத்துக்கு சிறிது முந்திச் செய்யப்பட்டது. செய்தார் யாரெனத் தெரியவில்லை. நூலும் அகப்படவில்லை. கைலாய மாலை, வையாபாடல், பரராசசேகரன் உலா மற்றும் இராசமுறை போன்ற நூல்களை முதல் நூல்களாகக் கொண்டே யாழ்ப்பாண வைபவமாலையை மயில்வாகனப் புலவர் இயற்றினாரென்று கூறுவர்.


"https://tamilar.wiki/index.php?title=இராசமுறை&oldid=15108" இருந்து மீள்விக்கப்பட்டது