இரண்டாம் விஜய ரகுநாதராய தொண்டைமான்
இரண்டாம் விஜய ரகுநாதராய தொண்டைமான் (Vijaya Raghunatha Raya Tondaiman) (c 1797 - 4 சூன் 1825) என்பவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தை 1807 பெப்ரவரி முதல் 1825 சூன் வரை ஆண்ட மன்னர் ஆவார்.
இரண்டாம் விஜய ரகுநாதராய தொண்டைமான் | |
---|---|
புதுக்கோட்டை அரசர் | |
ஆட்சிக்காலம் | 1 பெப்ரவரி 1807 – 4 சூன் 1825 |
முன்னையவர் | விஜயரகுநாத தொண்டைமான் |
பின்னையவர் | இரண்டாம் இரகுநாத தொண்டைமான் |
பிறப்பு | c 1797 புதுக்கோட்டை சமஸ்தானம், புதுக்கோட்டை |
இறப்பு | 4 சூன் 1825 (age 28) புதுக்கோட்டை |
மரபு | புதுக்கோட்டை |
தந்தை | விஜய இரகுநாத தொண்டைமான் |
தாய் | இராணி ஆயி அம்மணி ஆய் சாகிப் |
முன்வாழ்கை
புதுக்கோட்டை அரசர் விஜயரகுநாத தொண்டைமானுக்கும் அவரது இரண்டாவது மனைவியான ஆயி அம்மாள் ஆயி சாகிப் ஆகியோருக்கு மகனாக 1797இல் இரண்டாம் விஜய ரகுநாதராய தொண்டைமான் புதுக்கோட்டையில் பிறந்தார். இவர் தனி ஆசிரியரிடம் கல்வி பயின்றார்.[1] விஜயரகுநாத தொண்டைமானின் மகனிகளில் உயிரோடு இருந்த இரு மகன்களில் இவர் முத்தவர் ஆவார்.
ஆட்சி
புதுக்கோட்டை அரசர் விஜய ரகுநாத தொண்டமானின் மரணத்திற்குப் பிறகு இவர் 1807 பிப்ரவரி முதல் நாள் அரியணை ஏறினார். இவர் அரியணை ஏறும்போது பத்துவயது சிறுவனாக இருந்தார். இவர் தக்கவயது அடையும்வரை, ஆட்சி நிர்வாகமானது ஒரு அவையினால் நடத்தப்பட்டது. அந்த அவையானது தஞ்சாவூரின் ரெசிடெண்டாக இருந்த மேஜர் வில்லியம் பிளாக்பர்ன் என்பவரின் கண்காணிப்பில் இருந்தது.[2]
வில்லியம் பிளாக்பர்னால் நகரம் முழுவதும் அகன்ற சாலைகள், ஓடுபாவப்பட்ட வீடுகள், பொதுக் கட்டிடங்கள் ஆகியவற்றைக் கட்டினார். 1825 இல் அரசருக்கு ஒரு புதிய அரண்மனை கட்டப்பட்டது.[3] பிளாக்பர்ன் மராத்தியத்தியை நிர்வாக மொழியாக அறிமுகப்படுத்தினார். அது புதுக்கோட்டை அரசின் அதிகாரப்பூர்வ மொழியாக எழுபத்தைந்து ஆண்டுகளாக இருந்தது.
மறைவு
விஜய ரகுநாதராய தொண்டைமான் 1825 சூன் 4 அன்று ஒரு மரும நோயினால் இறந்தார். இவருக்குப்பின் இவரது தம்பி இரண்டாம் இரகுநாத தொண்டைமான் அரியணை ஏறினார்.
குடும்பம்
விஜய ரகுநாதராய தொண்டைமான் 1812 ஆம் ஆண்டு ஸ்ரீ சிங்கப்புலி ஆயியாரை மணந்தார். மேலும் இவர் திருமலை பன்றிகொண்டானின் மகளை இரண்டாவதாக மணந்தார். விஜய ரகுநாதராய தொண்டைமானுக்கு விஜய இரகுநாதராய தொண்டைமான் (இறப்பு 1823 திசம்பர் 23) என்ற ஒரு மகனும், இராஜகுமாரி இராஜம்மணி பாய் சாகிப் என்ற மகளும் இருந்தனர்.
குறிப்புகள்
- ↑ "Pudukkottai 2". Tondaiman Dynasty. Christopher Buyers.
- ↑ Shashi, S. S. (2003). Encyclopaedia Indica: India, Pakistan, Bangladesh. Vol. 100. Anmol Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7041-859-7.
- ↑ Butterworth, A. (1923). The southlands of Siva: some reminiscences of life in southern India. London: John Lane. p. 156.