இரணைதீவு

இரணைதீவு (Iranaitivu)[1][2] இலங்கையில் வடக்கே, கிளிநொச்சி மாவட்டத்தில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். ஈழப்போரின் போது 1992 ஆம் ஆண்டு முதல் இலங்கை ஆயுதப் படைகளின் தளமாக இருக்கும் இத்தீவில் இருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்ற தீவின் முன்னாள் குடியிருப்பாளர்கள் 2018 முதல் இங்கு மீண்டும் படிப்படியாகக் குடியேறி வருகின்றனர்.

இரணைதீவு
இரணைதீவு is located in Northern Province
இரணைதீவு
இரணைதீவு
இரணைதீவு is located in இலங்கை
இரணைதீவு
இரணைதீவு
புவியியல்
அமைவிடம்மன்னார் வளைகுடா
ஆள்கூறுகள்9°17′31″N 79°58′54″E / 9.29194°N 79.98167°E / 9.29194; 79.98167Coordinates: 9°17′31″N 79°58′54″E / 9.29194°N 79.98167°E / 9.29194; 79.98167
நிர்வாகம்
மக்கள்
மொழிகள்தமிழ்
மேலதிக தகவல்கள்
நேர வலயம்

கோவிடு-19 பெருந்தொற்றினால் இறந்த முசுலிம்களின் உடல்களை இத்தீவில் புதைப்பதற்கு ஏற்ற இடமாக இலங்கை அரசு 2021 மார்ச் 2 அன்று அறிவித்தது.[3]

புவியியல்

இரணைதீவு இரண்டு சிறிய தீவுகளால் ஆனது. இரண்டும் ஒரு சிறிய நிலப்பரப்பினால் இணைக்கப்பட்டுள்ளன. இதனாலேயே இது இரணைதீவு (இரட்டைத் தீவு) எனப் பெயர் பெற்றது.[4] இவ்விரட்டைத் தீவுகளில் பெரியது பெரியதீவு,[5][6] அல்லது "இரணைதீவு வடக்கு" என அழைக்கப்படுகிறது. அடுத்தது, சின்னத்தீவு,[5] Sinnatheevu,[6] அல்லது "இரணைதீவு தெற்கு" என அழைக்கப்படுக்கிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இரணைதீவு&oldid=38950" இருந்து மீள்விக்கப்பட்டது