இரங்கேச வெண்பா

இரங்கேச வெண்பா அல்லது நீதிசூடாமணி என்று அழைக்கப்படும் இந்நூல், திருக்குறளை அடிப்படையாக எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை எழுதியவர் பிறசை சாந்தக் கவிராயர் ஆவார். 1907 ஆம் ஆண்டு இந்நூலுக்கு சு. அ. இராமசாமி புலவர் என்பர் உரையெழுதி உள்ளார். அதனால் அதற்கு முன்னர் இது படைக்கப்பட்டிருக்க வேண்டும்.[1]

இந்நூலில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற திருக்குறளிலுள்ள மூன்று பால்களிலும் வெண்பாக்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

1 அறத்துப்பால்
1.1 பாயிர இயல்
1.2 இல்லற இயல்
1.3 துறவற இயல்
2 பொருட்பால்
2.1 அரசியல்
2.2 அமைச்சியல்
2.3 அங்க இயல்
2.4 ஒழிபியல்
3 காமத்துப் பால்
3.1 களவியல் (ஆண்பாற் கிளவிகள்)
3.2 கற்பியல் (பெண்பாற் கிளவிகள்)
3.3 அன்பியல்

இந்நூலில் ஒவ்வொரு திருக்குறளையும், இதிகாச புராணங்களுடன் இணைந்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. பழனியப்பன், மு. (April 11, 2011). "இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி". வல்லமை.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இரங்கேச_வெண்பா&oldid=14574" இருந்து மீள்விக்கப்பட்டது