இரங்கிதரங்கா

இரங்கிதரங்கா (ஆங்கிலம்:RangiTaranga) ஒரு 2015 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளிவந்த மருமம் நிறைந்த திரைப்படம். இதனை அனூப் பந்தாரி எழுதி, இயக்கியுள்ளார். ஸ்ரீ தேவி எண்டர்டேயின்ர்சு பெயரின் கீழ் எச்.கே.பிரகாஷ் உருவாக்கி வெளியிட்டுள்ளார். இதில் நிரூப் பந்தாரி, ராதிகா சேத்தன், அவந்திகா ஷெட்டி மற்றும் சாயிகுமார் போன்றோர் முதன்மை நடிகர்களாவர். இக்கதையின் சில காட்சிகள் துளுவ நாட்டு மரபினை எடுத்துக்காட்டுகிறது. இந்தத் திரைபப்டத்தின் ஒளிப்பதிவினை அமெரிக்காவின் லேன்ஸ் கப்லான், வில்லியம் டேவிட்சன் ஆகியோர் மேற்கொண்டனர்.[3]

இரங்கிதரங்கா
இயக்கம்அனூப் பந்தாரி
தயாரிப்புஹெச். கே. பிரகாஷ்
கதைஅனூப் பந்தாரி
இசைஅனுப் பந்தாரி
பின்னணி இசை:
பி. அஜனீஷ் லோக்நாத்
நடிப்புநிரூப் பந்தாரி
ராதிகா சேத்தன்
அவந்திகா ஷெட்டி
சாய்குமார்
ஆனந்த் வேலு
அரவிந்த் ராவ்
சிந்து மூலிமணி
ஒளிப்பதிவுலான்சு கப்லான்
படத்தொகுப்புபிரவீன் ஜோயப்பா
கலையகம்சிறீ தேவி என்டெர்டெயினர்சு
விநியோகம்ஜயன்னா பிலிம்சு
வெளியீடு3 சூலை 2015 (2015-07-03)
ஓட்டம்149 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிகன்னடம்
ஆக்கச்செலவு3.5 கோடி (US$4,40,000)[1]
மொத்த வருவாய்36 கோடி (US$4.5 மில்லியன்)[2]

கதைக்களம்

உதகையில் கௌதம் என்பவர் சுற்றத்திலிருந்து தனித்து வாழ்ந்து வரும் எழுத்தாளராவார். அவர் அனஷ்கு என்ற புனைபெயரில் எழுதிவருகிறார். அவர் தன் மனைவிக்கு உறக்கத்தில் தோன்றும் கெடுங்கனவுகளைத் தவிர்க்க மனைவின் சொந்த கிராமமான கமரொட்டுவின், அவளது வீட்டில் சில பரிகாரங்களை செய்ய இருவரும் விரைகின்றனர். அந்த பூர்வீக வீட்டில் அவளுக்கு சில அமானூசிய அனுபவங்கள் ஏற்படுகின்றன. அவ்வூரின் அஞ்சல் நிலைய மேலாளர் கலிங்கா, பள்ளிக்கூட ஆசிரியர் போன்றோரின் நட்பினைப் பெற்ற கௌதம், தாம் தங்கியுள்ள வீட்டில் நிலவும் மருமக் கதையை அறிகிறார்.

இதற்கிடையில், அனஷ்கு எனும் புனைப்பெயரின் பின் இருப்பவர் கௌதம் எனவறியாது, அவரைத் தேடி கமரொட்டு ஊருக்கு சந்தியா எனும் இளம்பெண் விரைகிறார். பின் தனது மனைவி காணாது செல்ல, அவரை தேடி அலையும் கௌதமை கண்டறிந்து, அவரது தேடலுக்கு உதவுகிறார் சந்தியா. ஈற்றில், பல திருப்பும்களைக் கொண்டு கௌதம், தாம் மெய்யாக யார், கமரொட்டு ஊரில் இருக்கும் மருமம் யாதென அறிந்து, தனது மனைவியையும் காப்பாற்றுகிறார்.

நடிகர்கள்

  • நிரூப் பந்தாரி - கௌதம் / சித்தார்த்
  • ராதிகா சேத்தன் - இந்து / ஹரினி
  • அவந்திகா ஷெட்டி - சந்தியா
  • சாயிகுமார் - தெங்கபவில் இரவிந்திர கலிங்க பட்டா

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=இரங்கிதரங்கா&oldid=29714" இருந்து மீள்விக்கப்பட்டது