இயைபு (நூல்வனப்பு)
இயைபு என்பது நூலின் வனப்பு இயல்புகள் எட்டில் ஒன்று.
நூல் ஆசிரியப்பாவால் அமைந்து, ஞ், ண், ந், ம், ன் மெய்யெழுத்தோடு முடியும் பாடல்களைக் கொண்ட நூல் இயைபு என்னும் வனப்பினைக் கொண்டதாக எடுத்துக்கொள்ளப்படும். [1]
மணிமேகலை நூலிலுள்ள 30 காதைப் பாடல்களும் 'ன்' என்னும் எழுத்தில் முடிகின்றன. கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை என்னும் நூலிலுள்ள பாடல்களும் இவ்வாறு முடிகின்றன. எனவே இவை இயைபு-வனப்பு நூல்கள். [2]
இவற்றையும் காண்க
அடிக்குறிப்புகள்
- ↑
- ஞகாரம் முதலா னகாரம் ஈற்றுப்
- புள்ளி இறுதி இயைபு என மொழிப - தொல்காப்பியம், செய்யுளியல் 232
- ↑ பேராசிரியர் உரை