இன்று (திரைப்படம்)
இன்று (Indru) என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். நவீன் எஸ். முத்துராமன் இயக்கிய இப்படத்தில் கார்த்திக், தனூராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். படம் வழக்கமான கூறுகளைக் கொண்டதாக இருந்தது. வணிக ரீதியாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.[1]
இன்று | |
---|---|
இயக்கம் | நவீன் எஸ். முத்துராமன் |
தயாரிப்பு | ஆர். தட்சிணாமூர்த்தி |
கதை | நவீன் எஸ். முத்துராமன், கலைஞானி (உரையாடல்) |
இசை | தேவா |
நடிப்பு | கார்த்திக் தனூராய் கருணாஸ் தேவன் |
ஒளிப்பதிவு | யூ. கே. செந்தில் குமார் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | காசியப் புரோடக்சன்ஸ் |
வெளியீடு | 25 திசம்பர் 2003 |
ஓட்டம் | 146 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- கார்த்திக் கௌதமாக
- தனூராய் ஜெனிபராக
- கருணாஸ் விஸ்வநாத்தாக
- தேவன் இராம்பிரசாத்தாக
- நிழல்கள் ரவி கர்னல் சோம்நாத்தாக
- டெல்லி கணேஷ் ரிச்சர்ட்டின் தந்தையாக
- பிரமீட் நடராஜன் அமைச்சர் ஓப்பில்லா மணி
- தலைவாசல் விஜய் உயர் அதிகாரியாக
- சிறீமன் ரிச்சர்டாக
- அஜய் ரத்னம் உயர் அதிகாரியாக
- வாசு விக்ரம் எ.பி. ஏழுமலையாக
- குமரேசன் பாண்டியனாக
- இராதிகா சௌத்ரி நந்தினியாக
- பாத்திமா பாபு கௌதமின் தாயாக
- மதன் பாப் அமைச்சரின் தனி உதவியாளராக
- நரேன் இராம்பிரசாத்தின் அடியாளாக
- ராஜ்கபூர் கேப்டன் கபூராக
- ராம்ஜி சிறப்புத் தோற்றத்தில்
இசை
இப்படத்திற்கான இசையை தேவா அமைத்தார். பாடல் வரிகள் நா. முத்துக்குமார், யுகபாரதி, இயக்குனர் நவீன் எஸ். முத்துராமன் ஆகியோர் எழுதினர்.[2]
எண். | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் | நீளம் (மீ: கள்) |
1 | கார்த்திகை ஆனவளே | ஹரிஷ் ராகவேந்திரா, சுஜாதா | யுகபாரதி | 05:48 |
2 | சல்வார் பூவனம் | கிருஷ்ணராஜ் | நா. முத்துக்குமார் | 05:54 |
3 | ஷோக்கா ஆடிக்குற | திப்பு, அனுராதா ஸ்ரீராம் | 05:04 | |
4 | பொன்மலை | கார்த்திக் | 04:53 | |
5 | வெட்டு அத | மால்குடி சுபா | நவீன் எஸ்.முத்துராமன் | 04:58 |