இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (ஏப்ரல் 2019) |
இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை என்னும் நூல் எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணனால் எழுதப்பட்டது. இந்நூலில் பன்னிரண்டு கட்டுரைகள் உள்ளன. ஆதிகாலம் தொடங்கி தற்காலம் வரையிலான பெண்களின் நிலை விளக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக புராணங்களும் திரிக்கப்பட்ட கதைகளும் பெண்ணடிமைத்தனத்தின் வேர்களாக இருந்தமை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளது.
இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை | |
---|---|
நூல் பெயர்: | இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை |
ஆசிரியர்(கள்): | இராஜம் கிருஷ்ணன் |
வகை: | ஆய்வுக் கட்டுரை |
துறை: | பெண்ணியம் |
இடம்: | சென்னை |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 199 |
பதிப்பகர்: | தாகம், 34 சாரங்கபாணி தெரு, தி.நகர் திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே, சென்னை 600 017 |
பதிப்பு: | மு.பதிப்பு சூலை 1995 இ. பதிப்பு திசம்பர் 1995 மூ. பதிப்பு மார்ச் 1998 நா. பதிப்பு மே 2006 |
ஆதித்தாய்
தாய்வழிச் சமூகமே மாந்த குல வரலாற்றின் தொட்டக்க அமைப்பாகும். அந்நாளில் தாயே சமூகக் குழுவின் தலைவராக இருந்தார். தடையற்ற பாலுறவு நிலவியது. குழந்தைகள் சமூகத்தின் பொறுப்பில் இருந்தனர். ஆண்கள் சமூகத்தின் பங்களிப்பாளர்களாக இருந்தனர்.
விருந்தோம்பல் பண்பாடு
திருமணச் சடங்கால் பெண்கள் தாய்வீட்டிலிருந்து பிரிக்கப்பட்டனர். பெண்களும் அவர்களது பொருள்களும் ஆண்களுக்குரியன எனும் நிலை உருவாகியது. இல்லறத்தின் முக்கிய பண்பாடாக விருந்தோம்பல் கருதப்பட்டது. அதனை வழங்குபவர்களாகப் பெண்கள் ஆக்கப்பட்டனர். அதன் நீட்சியாக பெண்கள் விருந்தினருக்கும் வேண்டப்பட்டவருக்கும் நுகர்பொருள் ஆயினர்.
தாய்மையின் வீழ்ச்சி
ஆண்கள் நாகரிகம் அடைந்தவர்கள்; பெண்கள் தீமையின் அடையாளங்கள் என புராண இதிகாச கதைகள் எழுந்தன. அக்கதைகளில் பெண்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டனர். தந்தையாதிக்கக் கொடூரக் கொலைகளின் எச்ச வடிவங்களாக மாதங்கி வழிபாடு, எல்லம்ம வழிபாடு, ரேணுகா தேவி வழிபாடுகள் தோன்றின. நிலவுடைமைச் சமுதாயம் வேர்பிடித்தது. பெண்கள் மீதான ஆதிக்கமும் இறுகியது.