இடைக்காட்டூர் ஆழிகண்டீசுவரர் கோயில்

இடைக்காட்டூர் ஆழிகண்டீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் இடைக்காட்டூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக ஆழிகண்டீசுவரர் உள்ளார். இவர் மணிகண்டீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி வௌந்தர்யநாயகி ஆவார். கோயிலின் தல மரம் வில்வம் ஆகும். கோயிலில் தல தீர்த்தமாக வைகை உள்ளது. பங்குனி உத்திரம், சிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரத்தின்போது 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.[1]

அமைப்பு

கோயில்களில் திருச்சுற்றில் வடகிழக்கில் நவக்கிரக சன்னதி காணப்படும். இவ்வூரில் தனிக்கோயிலில் நவக்கிரகங்கள் உள்ளன. இங்கு இடைக்காடர் தவ நிலையில் காணப்படுகிறார். இறைவன், இறைவி சன்னதிகளுக்கு நடுவில் சோமாஸ்கந்தர் நிலையில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். இறைவி தனி சன்னதியில் காணப்படுகிறார்.[1]

மேற்கோள்கள்