இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான சிறுபாணாற்றுப்படையை இவர் பாடியுள்ளார். அதில் ஓய்மானாட்டு நல்லியக்கோடன் சிறப்பிக்கப்பட்டுள்ளான். இவரது பாடலாக இந்த ஒருபாடல் மட்டுமே உள்ளது.
ஞாயிறு நடுவக்கொள்கை
சிறுபாணாற்றுப்படையில் வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து என இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் சூரியனை கோள்கள் சுற்றுவதை பதிந்துள்ளார்.[1][2] திருவள்ளுவர் சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை என திருக்குறளில் உலகம் சுழலும் பொருள் என்பதை குறிப்பிட்டுள்ளார்.[3]
மேற்கோள்கள்
- ↑ JV Chelliah (1946). Pattupattu - Ten Tamil Idylls (Tamil Verses with Englilsh Translation). Tamil University (1985 print).
- ↑ Herbert, Vaidehi (December 2, 2010). "Sirupaanatrupadai". Learn Sangam Tamil.
- ↑ Rev.Dr.G.U., Pope (17 திசம்பர் 2023). "திருக்குறள்". Tamil Virtual University.