இஞ்சிமேடு பெருந்தேவி தாயார் உடனுறை வரதராசப் பெருமாள் கோயில்
பெருந்தேவி தாயார் உடனுறை வரதராசப் பெருமாள் கோயில் என்பது தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், இஞ்சிமேடு என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.
இஞ்சிமேடு பெருந்தேவி தாயார் உடனுறை வரதராசப் பெருமாள் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 12°32′37″N 79°25′22″E / 12.5435°N 79.4228°ECoordinates: 12°32′37″N 79°25′22″E / 12.5435°N 79.4228°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவண்ணாமலை மாவட்டம் |
அமைவிடம்: | இஞ்சிமேடு |
சட்டமன்றத் தொகுதி: | வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | ஆரணி மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 178 m (584 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | வரதராசப் பெருமாள் |
தாயார்: | பெருந்தேவி தாயார் |
சிறப்புத் திருவிழாக்கள்: | வைகுண்ட ஏகாதசி, இராம நவமி, அனுமன் ஜெயந்தி |
தொன்மம்
இராமனின் மூலவிக்கிரகத்தை பரத்வாச முனிவர் இத்தலத்தில் பிரதிட்டை செய்து பூசித்துவந்தார் என்று இக்கோயில் குறித்த தொன்மம் கூறுகிறது.[1]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் உள்ள இராமர் வில் ஒன்றை ஏந்தி உள்ளார். அந்த வில்லின் மேற்புரத்தில் நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். இராமரின் சந்நிதியில் இராமரை தொழும் வடிவில் ஆஞ்சநேயரும், அருகிலேயே கருடாழ்வாரும் உள்ளனர்.[2] இக்கோயிலில் பெருந்தேவி தாயார் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.[1]
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 என். ராஜேஸ்வரி (2016). தி இந்து பொங்கல் மலர் 2016. சென்னை: இந்து தமிழ். p. 52.
- ↑ Sabarish (2018-05-31). "ராமரின் கையில் குடிகொண்டிருக்கும் நரசிம்மர்..!". https://tamil.nativeplanet.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.
{{cite web}}
: External link in
(help)|website=