இசைவாணி

இசைவாணி (Isaivani) (பிறப்பு 1996) என்பவர் சென்னையைச் சேர்ந்த ஒரு கானா பாடகர் ஆவார். இவர் தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவுடன் இணைந்து பாடிவருகிறார். 2020 ஆம் ஆண்டில் பிபிசியால் வெளியிடப்பட்ட உலகளாவிய 100 பெண் ஆளுமைகளில் ஒருவராக அவர் தேர்வுசெய்யபட்டார்.

இசைவாணி
பிறப்பு1996 (அகவை 27–28)
சென்னை, ராயபுரம்
இசை வடிவங்கள்கானா பாடல்கள்
தொழில்(கள்)பாடகர்
இணைந்த செயற்பாடுகள்தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்

வாழ்க்கை குறிப்பு

இசைவாணி 1996 இல் சென்னையின் ராயபுரத்தில் சிவகுமார் டி மற்றும் செல்விக்கு மகளாக பிறந்தார். [1][2][3] இவரது தந்தை தானே சுயமாகக் இசைப்பலகை வாசிக்க கற்றுக் கொண்ட கலைஞர் ஆவார். இவரது தந்தை சிறு வயதிலிருந்தே இவரது இசை திறனையும் பாடலையும் ஊக்குவித்தார், இசைவாணியும் இவரது சகோதரரும் வயிற்றில் சுமந்தபோதே செல்வியை பாடுமாறு ஊக்குவித்தார்.[3] இவரது இசை வாழ்க்கை ஆறு வயதில் தொடங்கியது, இவரது தந்தையுடன், 2018 ஆம் ஆண்டுவரை இவர் சுமார் 10,000 நிகழ்ச்சிகளில் இசைத்துள்ளார்.[3] இவர் தமிழ் திரைப்படப் பாடல்களைப் பாடத் தொடங்கினார் இதனுடன் கானா பாடல்களையும் பாடிவந்தார். இதற்கு பார்வையாளர்களின் வரவேற்ப்பை பெற்றுள்ளார்.[2] 2017 ஆம் ஆண்டில், கானா இசைக்கலைஞர் சபேஷ் சாலமன் இவரைத் தொடர்பு கொண்டு, டென்மாவால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய இசைக்குழுவுக்கு கலைக்காணலில் கலந்துகொள்ள ஊக்குவித்தார் - இந்த இசைக்குழு தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் ஆனது.[1]

இசைக்குழுவில் சேர்ந்ததன் மூலம், இசைவாணி உலகின் முதல் தொழில்முறை பெண் கானா பாடகர்களில் ஒருவரானார். [4] கூடுதலாக, இவர் ஒரு தாழ்த்தபட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுமாவார். ஆண்களும், உயர் சாதியினர் ஆதிக்கம் செலுத்தும் இசை உலகில் வெற்றி பெறுகிறார். கானாவை ஆண்களால் மட்டுமே கலைப்படைப்பாகப் பாதுகாக்க முடியும் என்று நினைத்தவர்களிடமிருந்து ஆரம்பகாலத்தில் எதிர்ப்புகள் இருந்தது. [2] தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவில் இவர் பாடிய இசை அரசியல்: தலித் மக்கள் கொல்லபட்டதை எதிர்த்து 2018 ஆம் ஆண்டில் இவர்கள் 'பீஃப் சாங்' வெளியிட்டனர்; சபரிமலை கோயில் சர்ச்சை குறித்து 2019 ஆம் ஆண்டில் இவர்கள் 'ஐயம் சாரி ஐயப்பா' பாடலை வெளியிட்டனர்.[2] மேடையில் இவர் கானா பாடல்களை பாடுவது மற்ற பெண்கள் கானா கலைஞர்களாவதற்கு வழிவகுத்தது.[5]

2020 ஆம் ஆண்டில், பிபிசி 100 மகளிர் விருதால் கானா இசையில் இவர் செய்த பணிக்காக அங்கீகரிக்கப்பட்டார். [1][5][6]

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இசைவாணி&oldid=27606" இருந்து மீள்விக்கப்பட்டது