ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம்
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. வாணியம்பாடி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆலங்காயத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,22,736 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 17,686 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 22,779 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
அலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- பீமகுளம்
- செட்டியப்பனூர்
- தேவஸ்தானம்
- எச்சாங்கல்
- இளயநகரம்
- கிரிசமுத்திரம்
- கோவிந்தாபுரம்
- ஜாஃப்ரபாத்
- கலேந்திரா
- கொத்தகோட்டை
- மாடனன்சேரி
- கொல்லகுப்பம்
- நாய்க்கனூர்
- நரசிங்காபுரம்
- நெல்லிவாசல் நாடு
- நெக்கானமலை
- நிம்மியம்பட்டு
- பள்ளிப்பட்டு
- பெரியகுரும்பத்தெரு
- பெத்தவேப்பம்பட்டு
- புதூர்நாடு
- புங்கம்பட்டுநாடு
- ரெட்டியூர்
- சாமண்டிகுப்பம்
- வளையாம்பட்டு
- வள்ளிப்பட்டு
- வெள்ளக்குட்டை
- விஜிலாபுரம்
- வெலதிகமானிபெண்டா