ஆறு செல்வன்
ஆறு செல்வன் (பிறப்பு:29, மே 1959), புதுச்சேரி, செவராயப்பேட்டையைச் சேர்ந்த கவிஞர். நாடகப்புலமை மிக்கவர். இவர் வானொலி, தொலைக்காட்சி, மேடைகளுக்காகப் பல நாடகங்களை உருவாக்கியவர். இருபது ஆண்டுகளாக மேடை நாடகப் பட்டறிவு கொண்டவர். 150க்கு மேற்பட்ட நாடகங்களை அரசு, தனியார் நிறுவனங்களுக்காக அரங்கேற்றியவர்.[1]
ஆறு செல்வன் | |
---|---|
பிறப்பு | புதுச்சேரி, இந்தியா |
வகை | கவிதை, சிறுவர் பாடல், நாடகம் |
வாழ்க்கைக் குறிப்பு
ஆறு செல்வன் ஆறுமுகம், முனியம்மாள் தம்பதிகளின் புதல்வர். இவர் குருசுகுப்பம் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வி கற்று, தாகூர் கல்லூரியில் புகுமுக வகுப்பினை நிறைவு செய்தவர். 1983 மார்ச்சு 25 இல் சிப்மர் மருத்துவமனையில் பணியில் இணைந்து இன்று கணக்காளராக உயர்ந்தவர். இவர் கவிதை, சிறுவர் பாடல், நாடகம் போன்ற துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார்.
வெளிவந்த நூல்கள்
- வானவில்
- அமுதம்
- ஆய்த எழுத்து
- பறை
- தமிழா! தமிழா!
- பட்டாம் பூச்சி (சிறுவர் பாடல்)
- உழைக்கும் கைகளே! (நாடகம்)
- ஒருதாய் மக்கள் நாம் என்போம்! (நாடகம்)
வெளி இணைப்புகள்
- ஆறு செல்வனின் தமிழ் உணர்வு... முனைவர் மு.இளங்கோவன்