ஆர். வெங்கடேஷ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆர். வெங்கடேஷ் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். தொண்ணூறுகளில் எழுத துவங்கிய இவர், எழுத்தாளர் மட்டும் அல்லாது, பத்திரிக்கையாளர், பதிப்பாசிரியர் என்று இதழியலில் பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டுள்ளார். கணிதத்தில் இளங்கலைப்பட்டமும், மக்கள் தொடர்பு மற்றும் இதழியிலில் முதுகலைப்பட்டயமும் பெற்றவர்.
ஆரம்பத்தில் தினமணி கதிர், கல்கி, சுபமங்களா, புதிய பார்வை போன்ற இலக்கிய இதழ்களிலும் பேட்டிகள், சிறுகதைகள் ஆகியவற்றை எழுதி வந்த இவர், இப்போது ஜூனியர் விகடன், நாணயம் விகடன் போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். 'துளசி', 'ராஜன்', 'ஞானம்', 'பரத்', 'நப்பின்னை' என்ற புனைபெயர்களில் இவரது கதைகள் கட்டுரைகள் நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனந்த விகடனால் வெளியிடப்பட்ட பிரிட்டானிகா தமிழ் தகவல் களஞ்சியம் உருவானதில் இவரும் முக்கிய பங்கு வகித்தார். 'நேசமுடன்' என்ற தலைப்பில் மின்மடல் ஒன்றையும் இவர் நடத்தி வருவதால் இணையத்தில் இவர் ”நேசமுடன் வெங்கடேஷ்” என்று அறியப்படுகிறார்.
இவர் லில்லி தேவசிகாமணி பரிசு, இலக்கியச் சிந்தனை பரிசு, கலைமகள் அமரர் ராமரத்தினம் குறுநாவல் போட்டிப் பரிசு உட்பட பல்வேறு பரிசுகள் பெற்றிருக்கிறார்.
எழுதியுள்ள நூல்கள்
- பெருங்கூட்டத்தில் ஒருவன் - சிறுகதைத் தொகுப்பு
- கரைந்தவர்கள் - சிறுகதைத் தொகுப்பு
- முதல் மழை - சிறுகதைத் தொகுப்பு
- வேறு முகம் - கவிதை தொகுப்பு
- மியூச்சுவல் ஃபண்ட்
- பெண்களின் அந்தரங்கம்
- இருவர் - நாவல்