ஆர். பி. பராஞ்சபே
சர் ரகுநாத் புருசோத்தம் பராஞ்சபே (Sir Raghunath Purushottam Paranjpye) (16 பிப்ரவரி 1876 – 6 மே 1966) ராங்லர் பராஞ்சபே என்றும் அழைக்கப்படுகிறார். 1945 முதல் 1947 வரை ஆத்திரேலியாவிற்கான இந்தியாவின் முதலாவது உயர் ஆணையராகப் பணியாற்றிய இந்தியக் கணிதவியலாளரும் மற்றும் இராஜதந்திரியும் ஆவார். கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் மூத்த ரேங்க்லர் பட்டத்தை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். ரேங்க்லர் என்பது கணிதத்தில் சிறந்து விளங்குபர்களுக்கு இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் ஒரு அறிவுசார் கௌரவமாகும். பிற்கால வாழ்க்கையில் இவர் பல இந்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.
இரகுநாத் புருசோத்தம் பராஞ்சபே | |
---|---|
रघुनाथ परांजपे | |
1899களில் பராஞ்சபே | |
புனே பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் | |
பதவியில் 1956 - 1959 | |
முன்னையவர் | மு. ரா. செயகர்]] |
பின்னவர் | தத்தாத்ரேய கோபால் கார்வே |
ஆத்திரேலியாவிற்கான இந்தியாவின் உயர் ஆணையர் | |
பதவியில் 1945 - 1947 | |
முன்னையவர் | பதவி நிறுவப்பட்டது |
பின்னவர் | தயா சிங் பேடி |
மும்பை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் | |
பதவியில் 1934 - 1941 | |
முன்னையவர் | மிர்சா அக்பர் கான் |
பின்னவர் | சர் ருஸ்தம் பெஸ்டோஞ்சி மாசானி |
இலக்னோ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் | |
பதவியில் 1932 - 1938 | |
முன்னையவர் | பண்டிட் ஜகத் நாராயண் |
பின்னவர் | எஸ். எம். அபியுல்லா |
பம்பாய் மாகாணத்தின் கல்வி அமைச்சர் | |
பதவியில் 1921 - 1923 | |
முன்னையவர் | பதவி நிறுவப்பட்டது |
பின்னவர் | பாஸ்கரராவ் வித்தோஜிராவ் ஜாதவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 பெப்ரவரி 1876 |
இறப்பு | 6 மே 1966 (வயது 90) |
தேசியம் | பிரித்தானிய இந்தியர் (1876-1947) இந்தியர் (1947-1966) |
பிள்ளைகள் | சகுந்தலா பராஞ்சபே |
உறவினர்கள் | அரி புருசோத்தம் பராஞ்சபே (இளைய சகோதரர்) சாய் பராஞ்சபே (பேத்தி) இராம்தாசு பராஞ்சபே ( உறாவினர்) |
முன்னாள் கல்லூரி | மராத்த உயர்நிலைப் பள்ளி, மும்பை பெர்க்குசன் கல்லூரி, புனே புனித ஜான்ஸ் கல்லூரி, கேம்பிரிச்சு |
வேலை | கணிதவியலாளர், பல்கலைக்கழக நிர்வாகி, இராஜதந்திரி |
விருதுகள் | வீரத்திருத்தகை (1942) |
புனைப்பெயர் | ராங்லர் பராஞ்சபே |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
இரகுநாத் பராஞ்சபே மகாராட்டிராவின் கடலோர இரத்னகிரி மாவட்டத்தில் தபோலிக்கு அருகிலுள்ள முர்டியில் ஒரு சித்பவன் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் 1896 இல் கேம்பிரிச்சிலுள்ள புனித ஜான்ஸ் கல்லூரியில் நுழைவதற்கு முன்பு, மராட்டிய உயர்நிலைப் பள்ளி, புனேவிலுள்ள பெர்க்குசன் கல்லூரி, மற்றும் மும்பை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்றார். 1899 இல் மூத்த ரேங்க்லராக இளங்கலைப் பட்டம் பெற்றார். நவம்பர் 1901 இல் புனித ஜான்ஸ் கல்லூரியின் சகாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பராஞ்சபே 1907 வரை அதைத் தொடர்ந்தார். ஆனால் 1902 இல் பெர்க்குசன் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக சேர இந்தியா திரும்பினார்.[1] ஆரம்பகால இந்திய ஆவணப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான எச். எஸ். பதாவ்டேகர், பராஞ்சபேப் பற்றிய ஆவணப்படங்களான் ரிட்டர்ன் ஆஃப் ரேங்க்லர் பராஞ்சபே (1902) மற்றும் டெல்லி தர்பார் ஆஃப் லார்ட் கர்சன் (1903) போன்ற ஊமைத் திரைப்படங்களை உருவாக்கினார். [2] [3] [4]
தொழில்
பராஞ்சபே, 1907 ஆம் ஆண்டில், பெர்க்குசன் கல்லூரியில் இந்தியக் கணித சங்கத்தின் முதல் நூலகரானார். [5] பின்னர் அக்கல்லூரியின் முதல்வராகவும் ஆனார். 1926 வரை இரண்டு தசாப்தங்களாக அந்தப் பதவியில் இருந்தார். [6] தொடர்ந்து, மும்பை பல்கலைக்கழகம் மற்றும் லக்னோ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்தார். [7] 1921 ஆம் ஆண்டில், கொல்கத்தா பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. [8]
சர் இரகுநாத் பராஞ்சபே 1912 ஆம் ஆண்டு மும்பை பல்கலைக்கழகத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி மும்பை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசு சட்டம் 1919 இன் படி இவர் மீண்டும் விரிவாக்கப்பட்ட சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பம்பாய் மாகாணத்தின் முதல் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டு 1923 வரை அப்பதவியில் இருந்தார். 1923 தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட இவர் சுயாட்சிக் கட்சியின் எம். ஆர். ஜெயகரிடம் தோல்வியடைந்தார்.
1942 இல் காலனித்துவ அரசாங்கத்திடம் இருந்து பராஞ்சபே வீரத்திருத்தகை பட்டம் பெற்றார். மூன்று ஆண்டுகளில் (1944-1947) பிரித்தானிய இராச்சியத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன், பிரித்தன் அரசாங்கம் இவரை ஆத்திரேலியாவுக்கான இந்திய உயர் ஆணையராக நியமித்தது.[9] பிரித்தானிய இராச்சிய நாட்களில், இந்தியாவில் தேசியவாதக் கொதிப்பு ஏற்பட்ட நேரத்தில் இவர் பிரித்தானிய அதிகாரிகளின் பக்கம் அடிக்கடி சேர்ந்து பணியாற்றியதாக சில விமர்சனங்கள் இருந்தன.
இவர் 1949 இல் சென்னையில் இந்தியப் பகுத்தறிவாளர் ஒன்றியத்தை நிறுவினார். [10] மேலும், பல ஆண்டுகள் அதன் தலைவராக இருந்தார். [11] 84 நாட் அவுட், என்ற இவரது சுயசரிதை 1961இல் வெளிவந்தது.
குடும்பம்
இந்திய எழுத்தாளரும், நடிகையும், அரசியல்வாதியுமான சகுந்தலா பராஞ்சபே இவரது மகளாவார். [12] [13] இந்திய திரைப்பட இயக்குநரும் மற்றும் திரைக்கதை எழுத்தாளருஅன சாய் பராஞ்சபே இவரது பேத்தியாவார்.[14]
மேற்கோள்கள்
- ↑ "Paranjpye, Raghunath Purushottam (PRNY896RP)". A Cambridge Alumni Database. University of Cambridge.
- ↑ Filming the Gods: Religion and Indian Cinema, Rachel Dwyer, Routledge, 2006. pp 14, ISBN 0-415-31425-9.
- ↑ Indian Cinema Database பரணிடப்பட்டது 21 அக்டோபர் 2007 at the வந்தவழி இயந்திரம் SilentFilms.
- ↑ Mumbai International Film Festival (MIFF) பரணிடப்பட்டது 3 திசம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம் Foreword, 4th Mumbai International Film Festival, 1996.
- ↑ Newsletter 17, Indian Mathematical Society
- ↑ "Chronomedia: 1901 – December 7". http://www.terramedia.co.uk/Chronomedia/years/1901.htm.
- ↑ First Meeting of the Central Advisory Board of Education பரணிடப்பட்டது 11 பெப்ரவரி 2011 at the வந்தவழி இயந்திரம் 19–20, December 1935.
- ↑ "Annual Convocation". கொல்கத்தா பல்கலைக்கழகம் இம் மூலத்தில் இருந்து 28 May 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120528004638/http://caluniv.ac.in/convocation-2012/hony_degrees.htm.
- ↑ Sai Paranjpye at ASHA பரணிடப்பட்டது 17 திசம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Rationalist International Bulletin 21". 21 October 1999. http://www.rationalistinternational.net/archive/en/rationalist_1999/21.htm.
- ↑ An Introduction to Indian Rationalist Association, 27 May 2006.
- ↑ NOMINATED MEMBERS OF RAJYA SABHA.
- ↑ SAI PARANJPYE, INDIAN FILMMAKER library, worldbank.
- ↑ "Sai Paranjpye at ASHA" இம் மூலத்தில் இருந்து 17 December 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071217041336/http://www.asha-foundation.org/women/women/sai_paranjpe.php.
- R.P. Paranjpye, 84 Not Out, National Book Trust, New Delhi, 1961. Autobiography.
- Wrangler Raghunath Purushottam Paranjpye by Dr Anant Deshmukh, 2011. Biography.
- John Kenneth Galbraith, Ambassador's Journal Publisher, Houghton Mifflin Company (1969) Language: English ISBN 0-241-01619-3 ISBN 978-0241016190