ஆர். பானுமதி

ஆர்.பானுமதி (R. Bamnumathi, பிறப்பு: சூலை 20, 1955) தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞரும், நீதிபதியும் ஆவார். இவர் ஆகத்து 13, 2014 அன்று உச்சநீதிமன்ற நீதிபதியாகப் [1]

பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை

இவர் தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் 1955-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20-ஆம் தேதி பிறந்தார்.சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற அவர், 1981-ம் ஆண்டு தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். [2]

தொழில்முறை வாழ்க்கை

1988-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ஆம் தேதி நேரடியாக மாவட்ட நீதிபதியானார் . கோயம்புத்தூர், சென்னை, வேலூர், புதுக்கோட்டை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் நீதிபதியாகப் பணியாற்றினார். புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றியபோது பிரேமானந்தா சாமியாருக்கு இவர் அளித்த இரட்டை ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி இவர் பதவியேற்றார். கல்விக் கட்டண நிர்ணய வழக்கு, வீரப்பனைச் சுட்டுக்கொன்ற சிறப்புப் படையினருக்கு இரட்டைப் பதவி உயர்வு உட்பட பல்வேறு வழக்குகள் மீது தீர்ப்பு வழங்கியுள்ளார். பணி மூப்பு அடிப்படையில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக 2013, நவம்பர் 12 ஆம் தேதி குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டார். [3]

மேற்கோள்கள்

வார்ப்புரு:அமர்வில் உள்ள இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆர்._பானுமதி&oldid=10247" இருந்து மீள்விக்கப்பட்டது