ஆர். ஜி. பாலன்
ஆர்.ஜி. பாலன் எனும் இராசகோபால் பாலன் ஆங்கிலம்: R. G. Balan @ Raja Gopal Balan; (மலாய்: R. G. Balan; சீனம்: R.G.巴兰); மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம்; மலாயா தேசிய விடுதலை இராணுவம்; ஆகிய சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தைச் சேர்ந்தவர். இவர் மலாயா தேசிய விடுதலை இராணுவத்தின் துணைத் தலைவர்களில் ஒருவராகப் பொறுப்பு வகித்தவர்.[2]
ஆர்.ஜி.பாலன் R. G. Balan | |
---|---|
தனிநபர் தகவல் | |
பிறப்பு | இராச கோபால் பாலன் 02.10.1923 நோவா சுகோசியா தோட்டம், தெலுக் இந்தான், பேராக், மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள், பிரித்தானிய மலாயா |
அரசியல் கட்சி | மலாயா பொதுவுடைமை கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | சிவபாக்கியம் திருமணம்: 24 சூன் 1961; செட்டியார் மண்டபம்; கோலாலம்பூர்[1] |
கல்வி | ஆங்கிலோ சீனப்பள்ளி, தெலுக் இந்தான்; நாகரத்தினம் நினைவு ஆங்கிலப் பள்ளி |
படைத்துறைப் பணி | |
பற்றிணைவு | மலாயா தேசிய விடுதலை இராணுவம் |
பணி ஆண்டுகள் | 1942 - 1961; இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார் |
படையணி | ஆசிரியர், ஜெயமணி பொதுவுடைமை பிரசார இதழ் |
சமர்கள்/போர்கள் | மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பு; மலாயா அவசரகாலம்; |
மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பின் போது மலாயா பொதுவுடைமை கட்சியின் பிரசார இதழ்களான ‘ஜெயமணி’ (Jayamani); மலாயா குரல் (Voice of Malaya) ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தவர். சப்பானியர் காலத்தில், இவர் பகாங், லங்காப் எனும் இடத்தின் காட்டுப் பகுதிகளில் வாழ்ந்து வந்தார்.[2]
அதன் பின்னர் தாப்பா, கம்பார் பகுதிகளில் மலாயா பொதுவுடைமை கட்சியின் இந்தியர்ப் பிரிவில் பணியாற்றினார்.[3] இவர் அப்துல்லா சிடி மற்றும் சூரியானி அப்துல்லா ஆகியோருடன் நெருங்கிய நண்பராக இருந்தார். இவர்கள் இருவரும் மலாயா பொதுவுடைமை கட்சியின் துணைத் தலைவகளாக இருந்தவர்கள்.
குடும்பம்
ஆர்.ஜி. பாலனின் தந்தையார் பெயர் கே.ராமலிங்கம். இவரின் பூர்வீகம் இலங்கை. இங்கு மலாயாவில் ஒரு ரப்பர் தோட்டத்தில் மேற்பார்வையாளராகவும்; எழுத்தராகவும் பணியாற்றி வந்தார். தாயாரின் பெயர் சின்னத்தாயம்மாள் (Sinnathaiammal). இவரின் பூர்வீகம் சென்னை. இங்கு ஓர் இல்லத்தரசி. பாலன். குடும்பத்தில் நான்கு குழந்தைகள்; இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள்; அவர்களில் பாலன் மூத்தவர்.
பாலனின் தந்தை ராமலிங்கம் பேராக்கில் உள்ள நோவா சுகோசியா தோட்டத்தில் (Nova Scotia Estate) பணிபுரிந்தார். பாலன் ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது, அவரின் தந்தையார் முழு குடும்பத்தையும் இந்தியாவுக்கு அனுப்பினார். அவர்கள் ஏழு ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தனர். 1929-இல் மலாயாவுக்குத் திரும்பினர். அப்போது அவர் தெலுக் இந்தான், சோங் தோட்டத்தில் (Jong Estate) மேலாளராக இருந்தார்.
அரசியலில் ஈடுபாடு
1947-ஆம் ஆண்டில் ஆர்.ஜி. பாலன், ரசித் மைதீன் (Rashid Maidin) மற்றும் ஊ தியென் வாங் (Wu Tien Wang) ஆகியோருடன் இலண்டனில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் பொதுவுடைமை கட்சிகள் மாநாட்டில் (Communist Parties Conference of Commonwealth Nations) மலாயாவின் பொதுவுடைமை கட்சிகளின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.
இவர் இலண்டனில் இருந்து நாடு திரும்பிய பிறகு பேராக் ரப்பர் தொழிலாளர் சங்கம் (Perak Rubber Labourers Union) தோன்றுவதற்கு ஏற்பாடுகள் செய்தார். 1948-ஆம ஆண்டு மே 30-ஆம் தேதி காலனித்துவ அதிகாரத்தால் விசாரணையின்றி 1961-ஆம் ஆண்டு வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். சிறைக்குச் செல்லும் காலத்தில்; ஆர்.ஜி. பாலன் தொழிலாளர் அமைப்பாளராக (Labour Organiser) இருந்தார்.
1955-ஆம் ஆண்டில் இவர் காவலில் இருந்தபோது, மலாயா பொதுவுடைமை கட்சியின் மத்தியக் குழுவின் துணைத் தலைவராக (Vice Chairman of the Central Committee of the Communist Party of Malaya) நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் இரண்டாம் உலகப்போர் முடிந்த உடனேயே கட்சியின் தலைவர்கள் முதலில் ஆர்.ஜி. பாலனை ஈப்போவில் சந்தித்தனர்.
இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், மலாயா பொதுவுடைமை கட்சியின் உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் பசிபிக் போரின் வெற்றியாளர்களாக உருவெடுத்தனர்.
சான்றுகள்
- ↑ "Malaya S. A. Ganapathy" (in en). http://www.malaya-ganapathy.com/2015/04/. பார்த்த நாள்: 22 February 2023.
- ↑ 2.0 2.1 Munisamy, Saminathan. "The Missing Chapters of Indians Struggle for Independence of Malaya; Memoir of R Balan, Vice-President of the Malayan Communist Party; R.G Balan's actual name was Raja Gopal. He was born in Nova Scotia Estate, Teluk Intan, Perak on 22nd November 1921. His father name was K.Ramalingam, a conductor-cum-clerk on a rubber estate came from Ceylon. His mother's name was Sinnathaiammal," (in en). http://www.malaya-ganapathy.com/2017/05/a-few-days-ago-i-had-chance-to-go.html. பார்த்த நாள்: 22 February 2023.
- ↑ http://jameswongwingon-online.blogspot.my/2005/11/rg-balan-remembered.html