ஆரூர் தமிழ்நாடன்


ஆரூர் தமிழ்நாடன் என்பவர் இந்தியாவின் தமிழ்நாட்டின் ஒரு இலக்கியவாதி ஆவார். இவர் மரபுக் கவிதை, புதுக்கவிதை என இரண்டையும் எழுதுபவர்.

ஆரூர் தமிழ்நாடன்
ஆரூர் தமிழ்நாடன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ஆரூர் தமிழ்நாடன்

கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், புதினங்கள் என பல்வேறு இலக்கியப் படைப்புகளை படைத்துவரும் இவர், திரைப்படப் பாடல்களும் எழுதிவருகிறார். பல கவியரங்குகளையும், பட்டிமன்ற, வழக்காடு மன்றங்களையும் தலைமையேற்று நடத்தியிருக்கிறார்.  இவரது இயற்பெயர் சு. ரா. மோகன் என்பதாகும். பூண்டி புட்பம் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர்.

பணி :

தமிழகத்தின் பிரபல புலனாய்வு இதழான நக்கீரன் இதழின் தலைமைத் துணை ஆசிரியராகவும், இனிய உதயம் இலக்கியத் திங்களிதழின் இணை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.  

சர்ச்சைகள்

தமிழ்த் திரைப்படமான எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று உரிமை கோரி ஆரூர் தமிழ்நாடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.[1][2]

படைப்புகள்

  • இவரது முதல் கவிதை நூலான கற்பனைச் சுவடுகள், மு. கருணாநிதியின் அணிந்துரையோடு, இவரது 21-வது வயதில், வெளியானது.  இந்த நூலை கவியரசர் பொன்னிவளவன் வெளியிட்டு பாராட்டுரை நிகழ்த்தினார்.  
  • இவரது ’சூரியனைப் பாடுகிறேன்’ என்ற வெண்பாவால் ஆன கவிதை  நூலை, உவமைக் கவிஞர் சுரதா திருக்குவளையில் வெளியிட்டார். இது மு. கருணாநிதியைப் பற்றிய நூல் ஆகும்.
  • நீ ஒருபகல், ஈரோடு தந்த இடி, சிறகுகளாகும் சிலுவைகள், உயிர் திருடும் உனக்கு, திக் திக் தீபிகா, கனவே கனவே எங்கே போனாய்? என்பது போன்ற பல்வேறு நூல்களையும் படைத்திருக்கிறார்.
  • இவரது கவிதை, கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பாட நூலில் இடம் பெற்றிருக்கிறது.

தொகுப்புகள்

  • மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரைப் பற்றிய கட்டுரைப் பதிவுகளை ‘ஆனந்த யாழ்’ என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறார்.[3]
  • இனிய உதயம் நேர்காணல்களை, இலக்கிய ஜாம்பவான்களின் இன்னொரு உலகம் என்ற தலைப்பில் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்.[4]   

விருது மற்றும் பட்டங்கள்

  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கவிதைத் தொகுப்புக்கான பரிசை, எட்டயபுரத்தில் நடந்த பாரதி நூறாண்டு விழாவில் பெற்றிருக்கிறார்.
  • பாவேந்தர் நூற்றாண்டு விழாவில் தமிழக அரசின் பரிசுக் கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டிருக்கிறார். 
  •  தொல். திருமாவளவன், இவருக்கு ’பெரியார் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறார்.  
  • சென்னை பரிவு அறக்கட்டளை, 2017-ல் தன் முதல் ’கவிக்கோ’ விருதை ஆரூர் தமிழ்நாடனுக்கு வழங்கி சிறப்பித்திருக்கிறது.
  • தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டுக் கவிதைப் போட்டியிலிலும் (1995) அந்நாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பரிசு பெற்றிருக்கிறார். 

விருதுகள்

  • ’கவிமாமணி’
  • ’கவிப்புயல்’
  • ’கவியருவி’
  • ’பாவேந்தர் பட்டயம்’

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஆரூர்_தமிழ்நாடன்&oldid=9173" இருந்து மீள்விக்கப்பட்டது