ஆரிய அரசன் யாழ்ப் பிரம தத்தன்
ஆரிய அரசன் யாழ்ப் பிரம தத்தன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கப் பாடல்களின் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 184
புலவரைப்பற்றி
கபிலர் குறிஞ்சிப்பாட்டு பாடக் காரணமாக இருந்தவன் ஆரிய அரசன் பிரகத்தன். அவன் தமிழரின் களவுஒழுக்கம் தீது என்றான். களவொழுக்கம் தீதன்று, நன்மை பயப்பது என்பதைக் காட்டவே கபிலர் குறிஞ்சிப்பாட்டைப் பாடினார். இந்த ஆரிய அரசன் வேறு. தமிழ்நெறியைப் போற்றியவன்.
பாடலில் உள்ள செய்தி
தலைவன் தலைவியைப் பார்த்தான். அவள் வலை விரித்து மீன் பிடிக்கும் பரதவர் மகள். அவளது தலைமுடி மயிலின் கண் போன்று இருந்தது. தலைவனோ அவள் கண்வலையில் பட்டுவிட்டான். அந்த வலையிலிருந்து அவனால் மீளமுடியவில்லை. இந்த நிலையைப் பாங்கன் என்னும் தோழனிடம் சொல்லவந்த கிழவன்(தலைவன்)உலகியலைச் சொல்கிறான்.
உலகியல்
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை \ அறிந்த உண்மையை மறைத்துப் பொய் பேசும் வழக்கம் அறிவுசான்ற பெரியோர்களிடம் இல்லை. \ இப்படிச் சொல்லித் தன் பொய் சொல்லாப் பாங்கைத் தலைவன் புலப்படுத்துகிறான்.
பாங்கன் கூறியது
நீ பெருங்குடி மகன். சிறுகுடிக்குச் செல்லாதே.
தலைவன் மறுமொழி
இதற்கு இது சிறந்தது என்று எண்ணிப் பார்க்காமல் மாண்பையே பெரிதாக எண்ணி என் நெஞ்சம் அவளிடமே ஒழிந்துபோயிற்று.