ஆரவ்
ஆரவ் (Arav, இயற்பெயர்: நபீசு கிசார், Nafeez Kizar) தமிழ்நாட்டைச் சார்ந்த திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி நடிகரும் ஆவார்.[1] ஆரவ், தமிழ் விஜய் தொலைக்காட்சியில் 2017 பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பருவ வெற்றியாளர் ஆவார்.[2][3]
ஆரவ் | |
---|---|
பிறப்பு | நபீஸ் கிசார் 31 அக்டோபர் 1988 நாகர்கோவில், தமிழ் நாடு, இந்தியா |
இருப்பிடம் | திருச்சி, தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட நடிகர், விளம்பர மாடல் |
செயற்பாட்டுக் காலம் | 2014 - தற்போது வரை |
இவரது சொந்த ஊர் திருச்சி, படித்து முடித்த பிறகு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர், சிறு வயது முதலே நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர் பார்த்த வேலையை விட்டுவிட்டு வடிவழகு செய்ய தொடங்கினார். பிறகு விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியாளர் ஆனார் [4].
நடித்த திரைப்படங்கள்
- ஓ காதல் கண்மணி, 2016
- சைத்தான், 2017
- மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ், 2019
- கலகத் தலைவன், 2022
- மாருதி நகர் போலிஸ் ஸ்டேசன், 2023
மேற்கோள்கள்
- ↑ `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஆரவ் ஏன் கலந்துகொண்டார்?
- ↑ "100 நாள் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் பட்டத்தை தட்டிச்சென்றார் ஆரவ்" இம் மூலத்தில் இருந்து 2017-10-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171002175355/http://www.maalaimalar.com/News/TopNews/2017/10/01011743/1110738/Aarav-was-announced-the-winner-of-the-bigboss-show.vpf.
- ↑ 50 லட்சத்தை தட்டி சென்ற ஆரவ்: பிக்பாஸ் வெற்றி தருணங்கள்...
- ↑ எனக்கு நிச்சயதார்த்தம் ஆகலை, காதலியும் இல்லை – ஆரவ்