ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)
ஆயிரத்தில் ஒருவன் (Aayirathil Oruvan) [2] செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக் சிவகுமார், ரீமா சென் ஆகியோர் முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க 2010 ஆம் ஆண்டு சனவரி மாதம் 13-ம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் பார்த்திபன், ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர். கதை, திரைக் கதை என்பனவும் இயக்குனரே ஏற்றுள்ளார். இத்திரைப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இது யுகானிகி ஒக்கடு என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வெற்றியும் பெற்றது.
ஆயிரத்தில் ஒருவன் | |
---|---|
இயக்கம் | செல்வராகவன் |
தயாரிப்பு | ரவீந்திரன் |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | கார்த்திக் சிவகுமார் ரீமா சென் பிரதாப் போதான் பார்த்திபன்[1] ஆண்ட்ரியா ஜெரமையா |
வெளியீடு | ஏப்ரல் 13, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
கி.பி. 1279 இல் கதை தொடங்குகிறது. சோழர் ஆட்சியின் கடைசிக்கட்டம். பாண்டியர் சோழரோடு போரிட்டு, பாண்டியரின் குலதெய்வச் சிலையையும், ஒரு சோழ இளவரசனையும் வியட்னாம் அருகிலுள்ள ஒரு தீவுக்கு அனுப்பி வைத்தார்களாம். அதைத் தேடி செல்லும் தொல்பொருளாய்வாளர் அன்ரியாவின் அப்பா. சென்ற இடத்தில் காணாமல் போய்விடவே அங்கே அவரைத் தேடி செல்லும் குழுவில் இடம்பெறுகிறார்கள் ரீமாசென் மற்றும் அன்ரியா. மூட்டை தூக்குபவர் கார்த்தி. ஒரு வகையாக தீவை சென்றடைகிறார்கள். அங்கே தம் இளவரசனின் பாதுகாப்பைக் கருதி சோழர் செய்து வைத்துவிட்டுப் போன பொறிகள் இவர்கள் பயணத்தை கடினமாகவும், ஆபத்து மிக்கதாகவும் ஆக்குகிறது. பழங்குடியினர், காவல் வீரர்கள், பாம்புகள், மணலுள் மறைந்திருக்கும் பொறிக்கதவுகள் என பொறிகள் ஏராளம். இவைகளைத் தாண்டி உள்ளே சென்றவர்கள் கார்த்திக், ரீமா, அன்ட்ரியா மேலும் சிலரே. இதில் முதல் மூவரும், குழுவை விட்டு தொலைவில் வந்து சோழர்களின் சிதையுண்ட நகரைக் காண்கின்றனர். பின்னர் சோழரையும் காண்கின்றனர். அடியோடு அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட சோழர் வந்த இடத்தில் நகரமைத்து வாழ்ந்திருப்பதாக காட்டப்படுகிறது. ஆயினும் முன்னிருந்த செல்வ வளம் குன்றி, பண்பாட்டுக் கூறுகளைப் பெரும்பாலும் இழந்தவர்களாகவே காட்டப்படுகின்றனர். தற்கால தமிழ் புரியாமையால், அவர்கள் மூவரையும் கொல்லும் தறுவாயில் ரீமாசென் பேச தொடங்குகிறார். பாண்டிய அரச குடும்பத்தின் எச்சங்களே ரீமாசென், அவருடன் வந்த இராணுவ அதிகாரி, ஓர் அமைச்சர் உள்ளிட்ட எண்வர் கொண்ட குழு. தம் குலதெய்வச் சிலையை மீட்க வந்த அவர், சோழரை கூண்டோடு அழிக்க மனத்தில் சூளுரை எடுத்துக் கொள்கிறார். தன்னைச் சோழனை மணம் முடித்து, தாய்த்தேசம் அழைத்து வரும்படி சொன்னதாகப் பொய் சொல்கிறார். சிறுவயதிலிருந்தே அவர் பெற்றோர் பாண்டியராகவே வளர்த்தமையும், தம் குலதெய்வ சிலையை மீட்க வேண்டியது இன்றியமையாததென்பதையும் வளர்த்தமையையும் நினைவுகூர்கிறார். இதனாலேயே, ரீமாவால், சோழர் தமிழ் பேச முடிந்தது. சிறைக் கைதிகளுக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் கார்த்திக் சோழன் மதிப்பைப் பெறுகிறார். பின் ரீமாசென் கெட்டவள் என்றறியும் போது காலம் கடந்துவிட்டது. இதுகாலும், சோழர் ஒரு தூதுவன் வந்து தம்மை மீட்பான் என முன்னோர் சுவரில் தீட்டி வைத்திருந்த சித்திரத்தில் இருந்தே தெரிந்து கொண்டனர். அதில் உள்ளது போலவே, கார்த்திக் வந்து இளவரசனை தூக்கும் போது, மாரி பொழிகிறது. சோழருக்கெதிராக படை தொடுக்கின்றனர். கவண் முதலிய பழைய உத்திகளைக் கையாளும் சோழர் படை, ரீமாசென் தண்ணீரில் கலந்துவிட்டுச் சென்ற மருந்தால் படைவீரர் விழவும், புது ஆயுதங்களுக்கு தாக்குபிடிக்காமையாலும் சிறைபிடிக்கப்படுகின்றனர். ஓவியத்தில் காட்டப்பட்டது போலவே கார்த்திக் சோழ இளவரசனுடன் விரைகிறார்.
மேற்கோள்கள்
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news/nov-07-02/16-11-07-parthiban.html
- ↑ "Aayirathil Oruvan Shooting Stalled". Galatta.com. Archived from the original on 2008-01-12. பார்க்கப்பட்ட நாள் 10 திசம்பர் 2007.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|5=
(help); External link in
(help)|publisher=