ஆயிசா அலி சோப்ரா
ஆயிசா அலி சோப்ரா (Aisha Ali Chopra) [1][2] இந்தியாவின் கருநாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பின்னணிப் பாடகியாவார். 1989 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பொதுவாக ஆயிசா என்று அழைக்கப்படும் இவர் பின்னணிப் பாடகியாகவும் பாடலாசிரியர் மற்றும் சமகால நடனக் கலைஞராகவும் அறியப்படுகிறார். 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆயிசா தனது முதல் தனிப்பாடல் இசைத் தொகுப்பை வெளியிட்டார். தொடர்ந்து இதே ஆண்டின் நவம்பர் மாதத்தில் நாசு என்ற அடுத்த இசைத் தொகுப்பையும் வெளியிட்டார். [3][4][5][6][7]
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ஆயிசா அலி சோப்ரா Aisha Ali Chopra |
---|---|
பிறந்ததிகதி | 16 செப்டம்பர் 1989 |
பிறந்தஇடம் | பெங்களூர், கருநாடகம், இந்தியா |
பணி | பாடகர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி நிலையம் | இரிசி பள்ளத்தாக்கு பள்ளி |
துணைவர் | ஆகாசு சாகர் சோப்ரா |
ஆரம்ப கால வாழ்க்கை
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் மதனப்பள்ளியில் பிறந்த ஆயிசா பெங்களூரு நகரில் வளர்ந்தார். ஏழாவது வயதிலிருந்தே பள்ளிக்கூடத்தில் கூட்டுப்பாடல் குழுவில் இடம்பெற்று பாடத் தொடங்கினார். எட்டு ஆண்டுகளாக குரல் இசையிலும் மற்றும் மிருதங்கத்தில் ஏழு ஆண்டுகளாகவும் கருநாடக இசையைக் கற்றுக் கொண்டே ஆயிசா இரிசி வேலி பள்ளியில் படித்தார். மேற்கத்திய கூட்டுப்பாடல் இசையையும் ஆயிசா கூடவே கற்றுக் கொண்டார். [8] வளர்ந்து வரும் பள்ளிக்கூட ஆண்டுகளிலேயே இவர் பல்வேறு பாடல் மற்றும் நடன போட்டிகளில் பங்கேற்றார். பல்வேறு விளம்பரப் பாடல்களை வானொலி விளம்பரங்களுக்காகவும் பாடியுள்ளார். ஆயிசா பெங்களூருவில் பிரபலமான பாடல்களை ஓர் இசைக்குழுவின் பதிவுடன் பாடுகின்ற வகை பாடகராகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு நவீன வகை இசைப் பாடல்களையும் ஒற்றையராகவும் பாடிவருகிறார்.
தொழில்
125 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவோன் குரல்கள் எனப்படும் பெண்களுக்கான உலகளாவிய இணையவழி திறமைத் தேடல் மற்றும் பெண்களுக்கான பாடல் எழுதுதல் போட்டிக்காக ஆயிசா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆங்காங் நாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியாவின் சார்பாக இவர் கலந்து கொண்டார்.
முதலாவது சுற்றுப் போட்டியில் உலகெங்கிலும் இருந்து 41 நாடுகளைச் சேர்ந்த 178 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 1.7 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பெற்று பெங்களுரைச் சேர்ந்த 21 வயதான ஆயிசா இரண்டாவது சுற்றுக்கு வெற்றியுடன் முன்னேறினார்.
ஆறு முறை கிராமி விருது வென்றவரும் அமெரிக்காவின் பிளாக் ஐடு பீசு என்ற இசைக்குழுவைச் சேர்ந்த முன்னணி பாடகருமான பெர்கி, சிறந்த பாடல் ஆசிரியர் தயான் வாரன், நடாசா பெதிங்பீல்டு, பிலீப்பைன்சு நாட்டைச் சேர்ந்த நடிகையும் பாடகியுமான இலியா சலோங்கா, உருசியாவின் புகழ்பெற்ற வலேரியா போன்றவர்கள் இப்போட்டியின் நடுவர்களாக இருந்தனர். பாப், சமகால நவீனஇசை மற்றும் இந்திய பாரம்பரிய இசை ஆகியவற்றை இணைத்து வர்த்தக முத்திரை குரலிசை பாணியுடன் தனது முதல் இசைத் தொகுப்பான அசுரடெய்ன் என்ற தனிப்பாடல் இசைத் தொகுப்பை ஆயிசா வெளியிட்டார். இரண்டு காதலர்களுக்கிடையிலான 'காதல்-வெறுப்பு' உறவை ஆராயும் இப்பாடல் தொகுப்பு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று வெளியானது. [7]இதைத் தொடர்ந்து ஆயிசா 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி நாசு என்ற இந்தி மொழியிலான பாடல் தொகுப்பை வெளியிட்டார். இத்தொகுப்பு பல்வேறு வகையான மக்களின் வெற்றிகளையும் பயணங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர முயற்சிக்கிறது. [9][10]
எதிர்காலத் திட்டம்
பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து பெண்களின் கல்வி மேம்பாடு, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் குடும்ப வன்முறை விழிப்புணர்வை ஊட்டும் வகையில் பாடுவதே தனது எதிர்காலத் திட்டம் என்று அவோன் வெற்றிக்குப் பின்னர் ஆயிசா ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ "Aisha's Hasratein is about a distraught relationship between a man and a woman". 5 October 2017. http://www.hindustantimes.com/music/aisha-s-hasratein-is-about-a-distraught-relationship-between-a-man-and-a-woman/story-fuRTj7HuSidvyREJ1jxxGK.html. பார்த்த நாள்: 9 December 2017.
- ↑ "Diva in Focus: 21-Year-Old Design Student Turns Singer! – Work & Life". https://www.idiva.com/interviews-work-life/diva-in-focus-21yearold-design-student-turns-singer/5843/1. பார்த்த நாள்: 9 December 2017.
- ↑ "Indian woman makes it to top 100 of Avon Voices Global Singing Talent Search". https://www.indiainfoline.com/article/news-business/indian-woman-makes-it-to-top-100-of-avon-voices-global-singing-talent-search-113101911248_1.html. பார்த்த நாள்: 9 December 2017.
- ↑ "Aisha: Naaz – Music on Google Play". https://play.google.com/store/music/album/Aisha_Naaz?id=Bhsrbtec26vesm35ikleyctisuy.
- ↑ "Naaz: An RnB styled Hindi album by Aisha Ali Chopra! | Latest News & Updates at Daily News & Analysis". dna. 1 January 2018. http://www.dnaindia.com/bollywood/report-an-rnb-styled-hindi-album-naaz-Aisha-Ali-Chopra-2571870.
- ↑ Naaz – EP by Aisha on Apple Music, 24 November 2017, retrieved 5 March 2018
- ↑ 7.0 7.1 "Aisha: Hasratein – Music on Google Play". https://play.google.com/store/music/album/Aisha_Hasratein?id=Bo2p5owceezyjbxrfkhadxzsfuy.
- ↑ "She wants to be a popstar!". http://www.newindianexpress.com/cities/hyderabad/2011/jun/03/she-wants-to-be-a-popstar-259031.html. பார்த்த நாள்: 9 December 2017.
- ↑ "Aisha's debut album 'Naaz' reflects the woman of today's India". http://www.radioandmusic.com/entertainment/editorial/news/171130-aisha%E2%80%99s-debut-album-%E2%80%98naaz%E2%80%99-reflects-the.
- ↑ "In conversation with Aisha Ali Chopra on her debut album NAAZ – The Score Magazine". The Score Magazine. 15 December 2017. https://highonscore.com/conversation-aisha-ali-chopra-debut-album-naaz/.