ஆனைமலை வட்டம்
ஆனைமலை வட்டம், என்பது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக ஆனைமலை உள்ளது. 2018 திசம்பர் 13 அன்று பொள்ளாச்சி வட்டத்தின் ஆனைமலை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளைக் கொண்டு இந்த வட்டம் உருவாக்கப்பட்டது.[1] இந்த வட்டமானது ஆனைமலை, மார்ச்சி நாயக்கன் பாளையம், கோட்டூர் ஆகிய மூன்று குறுவட்டங்களையும், 31 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[2]
மேற்கோள்கள்
- ↑ "தமிழகத்தில் புதிய வருவாய் வட்டங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்". செய்தி. தினமணி. 14 திசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 14 திசம்பர் 2018.
- ↑ ஆனைமலை வட்டத்தின் வருவாய் கிராமங்கள்