ஆத்மஜோதி

ஆத்மஜோதி ஆன்மீக மாசிகை ஈழத்தின் மலைநாட்டிலுள்ள நாவலப்பிட்டியிலிருந்து 1948ஆம் ஆண்டு திருக்கார்த்திகைத் திருநாளிலே சிவனொளிபாதச் சித்திரத்தைத் தாங்கி வெளிவரத் தொடங்கியது. அப்பொழுது ஆண்டு சந்தா மூன்று ரூபாய். இம்மாசிகை 1973இலே வெள்ளி விழாக் கொண்டாடிய பெருமையுடையது.

ஆத்மஜோதியைக் கௌரவ ஆசிரியராக இருந்து வழிநடத்தியவர் க. இராமச்சந்திரா எனும் சமரசஞானி. ஏழாலை நா. முத்தையா அவர்கள் ஆரம்பகாலம் முதல் நிருவாக ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியிலே பெரும் பங்கு கொண்டவர்.

ஆத்மஜோதி மாசிகை ஆன்மீக வெளியீடுகளிலே சமரச நெறியினைப் பின்பற்றி வந்த சிறப்புடையது. அதன் வளர்ச்சிப்பாதையிலே ஆன்மீக நெறியை எவ்விதக் கலப்புமின்றி வழங்கிய பெருமையுடையது.

1960இலே ஆத்மஜோதி அச்சகம் நிறுவப்பட்டதை அடுத்து ஆத்மஜோதியில் வெளிவந்தனவும் வெளிவராதனவுமான பல விடயங்கள் நூலுருப்பெற்றன. அதன் பத்தாம், பதினைந்தாம், இருபத்தைந்தாம் ஆண்டுகளிலே விசேட மலர்களும் வெளியிடப் பெற்றுள்ளன.

வெளி இணைப்புகள்

தளத்தில்
ஆத்மஜோதி
இதழ்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=ஆத்மஜோதி&oldid=14834" இருந்து மீள்விக்கப்பட்டது