ஆதியூர் அவதானி சரிதம்
ஆதியூர் அவதானி சரிதம் என்பது தமிழில் செய்யுள் வடிவில் வெளியிடப்பட்ட முதலாவது புதினம் ஆகும்.[1] இந்நூலை சென்னை புரசைவாக்கம் வித்துவான் தூ. வீ. சேஷையங்கார் என்ற பேராசிரியர் 1875 ஆம் ஆண்டில் எழுதினார். இந்துக்களுள் காணப்படும் குணா குணங்களையும் நடைகளையும் வருணித்து இப்புதினத்தை அவர் எழுதினார்.
மீள் பதிப்பு
சிட்டி சுந்தரராசன். சோ. சிவபாதசுந்தரத்துடன் இணைந்து இந்நூலைக் கண்டுபிடித்து 1994 ஆம் ஆண்டில் வரலாற்று முறையிலான முன்னுரை எழுதி வெளியிட்டார்.