ஆதலினால் காதல் செய்வீர்
ஆதலினால் காதல் செய்வீர், தொடர்கதை சுஜாதாவால் எழுதப்பட்டு குமுதம் இதழில் தொடர்கதையாக வந்தது.
ஆதலினால் காதல் செய்வீர் | |
நூலாசிரியர் | சுஜாதா |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | புதினம் |
வெளியீட்டாளர் | கிழக்குப் பதிப்பகம்[1], விசா பப்ளிகேஷன்ஸ்[2] |
ISBN | 978-81-8493-630-8 |
கதைக் கரு
ஜோமோ (ஜோலார்ப்பேட்டை மோகன்), அரிஸ் (பூர்ணசந்திர ராவ் உண்மையான பெயர் - அரிஸ்ட்டாட்டில் என்பதின் சுருக்கம் அரிஸ்), கிட்டா (கிருஷ்ணமூர்த்தி) என்கிற மூன்று பிரம்மச்சாரிகள், திருமணமான மாமாவுடன் (பார்ஸாரதி) ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். பார்ஸாரதியின் மனைவி, தமிழ் விரும்பி; வேறு நகரத்தில் வசித்து வருகிறார். கதையின் நாயகன் ஜோமோ, அபிலாஷா என்கிற பெண்ணைச் சந்தித்து காதலாகிறான். கிட்டா காதலித்துக் கல்யாணம் செய்துகொள்ள இருப்பது, கஸ்தூரி என்கிற கர்நாடக காவல்துறையில் வேலை செய்பவரை. அரிசைக் காதலிப்பவள், வீட்டுக்காரியின் மகள் லின்னி. இந்தக் காதல்களில் நேரும் பிணக்குகள், அல்லல்கள், குறுக்கீடுகள், போராட்டங்கள் உள்ளிட்டவைகளை நகைச்சுவையுடன் எழுதியுள்ளார், சுஜாதா.