ஆடூஉ முன்னிலை

முன்னிலைப் பாடல்களில் ஆண்மகனை முன்னிறுத்திப் பாடும் பாடல்களை ஆடூஉ முன்னிலை என்று இலக்கண நூலார் குறிப்பிடுகின்றனர்.

காதலார் சொல்லும் கடுஞ் சொல், உவந்து உரைக்கும்
ஏதிலார் இன் சொலின் தீது ஆமோ-போது எலாம்
மாதர் வண்டு ஆர்க்கும் மலி கடல் தண் சேர்ப்ப!-
ஆவது அறிவார்ப் பெறின்? [1]

இந்தப் பாடலில் நெய்தல் நிலத் தலைவனை 'மாதர் வண்டு ஆர்க்கும் மலி கடல் தண் சேர்ப்ப' என்பது ஆடூஉ முன்னிலை. ஆசை கொண்ட வண்டினத்தின் ஆரவாரம் மிகுந்த கடலோர ஈர நிலத்தின் தலைவனே! எனபது இந்த விளியின் பொருள்.

சான்றாண்மை, சாயல், ஒழுக்கம், இவை மூன்றும்
வான் தோய் குடிப் பிறந்தார்க்கு அல்லது,-வான் தோயும்
மை தவழ் வெற்ப!-படாஅ, பெருஞ் செல்வம்
எய்தியக்கண்ணும், பிறர்க்கு. [2]

இந்தப் பாடலில் வரும் வான் தோயும் மை தவழ் வெற்ப! என்பது குறிஞ்சிநிலத் தலைவனை விளித்த ஆடூஉ முன்னிலை

ஒப்பிட்டுக் காண்க

அடிக்குறிப்புகள்

  1. நாலடியார் 73
  2. நாலடியார் 142
"https://tamilar.wiki/index.php?title=ஆடூஉ_முன்னிலை&oldid=20155" இருந்து மீள்விக்கப்பட்டது