ஆடுகளம் நரேன்

ஆடுகளம் நரேன் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 1997ல் ராமன் அப்துல்லா திரைப்படத்தில் அறிமுகமான இவர் 2011ல் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படம் மூலமாக புகழ்பெற்றார், அதனால் ஆடுகளம் நரேன் என்று அறியப்படுகிறார்.[1] இவர் பாலு மகேந்திராவின் கதை நேரம் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

ஆடுகளம் நரேன்
Aadukalam Naren At The ‘Asuran’ Audio Launch.jpg
பிறப்புநாராயணன்
சென்னை, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1997–தற்போது

ஆரம்ப கால வாழ்க்கை

திருவாரூரை சேர்ந்த இவரது இயற்பெயர் நாராயணன். இராணுவத்தில் பணிபுரிந்த இவரது தந்தை ஒய்வுபெற்ற ராணுவ வீரர். அவரது வேலைக்காக குடும்பம் சென்னை வந்தது. சினிமாவுக்காக நரேன் என பெயர் மாற்றம் பெற்ற இவர், நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தால் நடன இயக்குநர் கலா நடத்தி வந்த நடிப்பு பள்ளியில் பயிற்சி பெற்றார். பிறகு அங்கேயே நடிப்பு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராக பணிபுரிந்தார்.[2]

தொலைக்காட்சி தொடர்கள்

திரைப்பட பட்டியல்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
1997 ராமன் அப்துல்லா ரவுடி
1998 தாயின் மணிக்கொடி கமிஸ்னர் ரவிச்சந்திரன்
1999 சூர்ய பார்வை கண்ணன்
2003 இன்று
2008 அறை எண் 305ல் கடவுள் காபி டே சொந்தக்காரர்
அஞ்சாதே
2009 வண்ணத்துப்பூச்சி
2011 ஆடுகளம் ரத்தினசாமி
யுத்தம் செய்
நஞ்சுண்டபுரம்
ஒஸ்தி
2012 நண்பன் சிறீகாந்த் தந்தை
மனம் கொத்திப் பறவை
சகுனி
பீட்சா சண்முகம்
சுந்தர பாண்டியன் ரகுபதி தேவர்
கோழி கூவுது
முகமூடி
2013 உதயம் என்.எச்4 சிறீகாந்த் மாமா
மூன்று பேர் மூன்று காதல்
மாசாணி தேவநாத கௌண்டர்
யமுனா
ஆல் இன் ஆல் அழகு ராஜா கந்தசாமி
தேசிங்கு ராஜா விமல் தந்தை
ஆரம்பம்
நையாண்டி நசிரியா தந்தை
2014 ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்
வீரன் முத்துராக்கு
பப்பாளி
இது கதிர்வேலன் காதல்
எப்போதும் வென்றான்
ஜிகர்தண்டா சுந்தர் (தயாரிப்பாளராக)
சரபம்
மேகா
திருடன் போலீஸ்
காடு வனத்துறை உயர் அதிகாரியாக
அழகு குட்டி செல்லம் படப்பிடிப்பில்
குகன் படப்பிடிப்பில்
ஈர வெயில் படப்பிடிப்பில்
கலியுகம் படப்பிடிப்பில்
கணிதன் படப்பிடிப்பில்
வாலு
யாகாவாராயினும் நா காக்க
பொறியாளன்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆடுகளம்_நரேன்&oldid=21464" இருந்து மீள்விக்கப்பட்டது