ஆடாமணி என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகப் பாகுபடுத்திக் காட்டப்பட்டுள்ள நூல் வகை. [1]

மனுநீதிச் சோழன் ஆராய்ச்சி மணி கட்டி ஆண்டது போல் ஆராய்ச்சிமணி கட்டி ஆள்வது தமிழ்நாட்டு அரசர்களின் வழக்கம். பகையரசன் நாட்டில் ஒற்றுப் பார்த்தல் அரசனின் கடமை. இதனைத் திருக்குறள் ஒற்றாடம் என்னும் அதிகாரந்நுல் விரித்துரைக்கிறது. இதனை ‘வேய்’ என்று இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு வேவு (ஒற்று)ப் பார்த்து வந்த செய்தியை மின்னல் போன்ற பெண் ஒருத்தி அரசனுக்குச் சொல்ல அரசன் போருக்கெழுந்த செய்தியை விரித்துரைத்துப் பாடுவது ஆடாமணி என்னும் சிற்றிலக்கியம் ஆகும். ஆராய்ச்சி-மணி ஆடாமல் அரனுக்குச் செய்தி வந்ததால் இந்த இலக்கியம் ஆடாமணி என்னும் பெயரைப் பெற்றது.

வாயின் மணிநா வாடாமற் செய மின்னாள்
வாயின் முத்து ஊற அசைக்க – வேய் இறைவன்
பூசலிட்டுப் பின் மேவப் பூட்டி உரைப்பதுவே
வாசம் மிகும் ஆடாமணி. என்பது நூற்பா.

[2]

மேற்கோள்

  1. பிரபந்தத் திரட்டு, தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 486
  2. நூற்பா எண் 10.
"https://tamilar.wiki/index.php?title=ஆடாமணி&oldid=16778" இருந்து மீள்விக்கப்பட்டது