ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் கோயில்
திருநல்லூர்ப் பெருமணம் ஆச்சாள்புரம் சிவலோகத்தியார் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரையில் உள்ள தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தருமையாதீன நிர்வாகத்திலுள்ள திருக்கோயில்[1]
தேவாரம் பாடல் பெற்ற திருநல்லூர்ப்பெருமணம் சிவலோகத்தியாகர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | சிவலோகபுரம், நல்லூர்பெருமணம், திருமண நல்லூர் , திருமணவை |
பெயர்: | திருநல்லூர்ப்பெருமணம் சிவலோகத்தியாகர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | ஆச்சாள்புரம் |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சிவலோகத்தியாகர், சிவலோகத் தியாகேசர், பெருமணமுடைய மகாதேவர். |
உற்சவர்: | திருஞான சம்பந்தர் |
தாயார்: | திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதி நாயகி, விபூதிகல்யாணி |
தல விருட்சம்: | மாமரம் |
தீர்த்தம்: | பஞ்சாக்கர, பிருகு, அசுவ, வசிஷ்ட, அத்திரி, சமத்கனி, வியாச மிருகண்டு தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சம்பந்தர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
அமைவிடம்
இது மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள ஐந்தாவது தலமாகும்.
சிறப்புகள்
சம்பந்தர் திருமணக் கோலத்துடன் சோதியுள் கலந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).