அ. விநாயகமூர்த்தி
அப்பாத்துரை விநாயகமூர்த்தி (Appathurai Vinayagamoorthy, 19 திசம்பர் 1933 - 28 மே 2017)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர்.
அ. விநாயகமூர்த்தி A. Vinayagamoorthy | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் | |
பதவியில் 2000–2004 | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கொக்குவில், யாழ்ப்பாணம் | 19 திசம்பர் 1933
இறப்பு | 28 மே 2017 யாழ்ப்பாணம் | (அகவை 83)
அரசியல் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
வாழிடம்(s) | 12B 3/1 ஸ்டேசன் வீதி, வெள்ளவத்தை, இலங்கை |
தொழில் | வழக்கறிஞர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் வாழ்க்கை
விநாயகமூர்த்தி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினராக இருந்தவர். இக்கட்சியின் தலைவர் குமார் பொன்னம்பலம் 2000 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அக்கட்சியின் தலைவரானார். 2000 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவர் அக்கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டார்.[2] 2001 ஆம் ஆண்டில் குமார் பொன்னம்பலத்தின் மகன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசியலில் இறங்கியதும், அக்கட்சியின் தலைமைப்பொறுப்பில் இருந்து விலகினார்.
2001 இல் தமிழ்க் காங்கிரசு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்றுவித்தனர். 2001 தேர்தலில் ததேகூ சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானார்.[3] 2004 தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டார். ததேகூ வேட்பாளர்களில் இவர் ஆறாவதாக வந்ததை அடுத்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[4]
2010 ஆம் ஆண்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகினார். அத்தோடு தமிழ்க் காங்கிரசும் விலகியது. ஆனாலும், விநாயகமூர்த்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலேயே தொடர்ந்து இருக்கலானார். 2010 தேர்தலில் ததேகூ சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் நடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்..[5]
மேற்கோள்கள்
- ↑ "யாழ். மாவட்ட முன்னாள் எம்.பி அப்பாத்துரை வினாயகமூர்த்தி காலமானார்" இம் மூலத்தில் இருந்து 31 மே 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170531205851/http://www.tamilwin.com/politics/01/147192. பார்த்த நாள்: 28 மே 2017.
- ↑ "General Election 2000 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924115732/http://www.slelections.gov.lk/pdf/preference2000GE.PDF.
- ↑ "General Election 2001 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100304015155/http://www.slelections.gov.lk/pdf/preference2001GE.pdf.
- ↑ "General Election 2004 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100304015514/http://www.slelections.gov.lk/pdf/Preference2004GE.pdf.
- ↑ preferences/Jaffna pref GE2010.pdf "Parliamentary General Election - 2010 Jaffna Preferences". இலங்கை தேர்தல் திணைக்களம். http://www.slelections.gov.lk/pdf/GE2010 preferences/Jaffna pref GE2010.pdf.[தொடர்பிழந்த இணைப்பு]
- "A. VINAYAGAMOORTHY". Directory of Members (இலங்கை நாடாளுமன்றம்). http://www.parliament.lk/directory_of_members/ViewMember.do?memID=307.