அ. சுப்ரமணியம்

அ. சுப்ரமணியம் (பிறப்பு: நவம்பர் 20 1946), மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'அரவிந்தன்' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் சுய தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1966 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மு. வரதராசனார் மீது கொண்ட அபிமானத்தால் அவரைப் பற்றிய நினைவு நிகழ்வுகளையும், நினைவு மலரையும் வெளியிட்டுள்ளார். திருக்குறள் பணிகளுக்காக தமிழகத்தில் சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில் சிறப்புச் செய்யப்பட்டுள்ளார்.

நூல்கள்

  • "கனவுகளின் சுயம்வரம்" (நாவல், 1990)
  • "தொடரும் (அ)நியாயங்கள்" (சிறுகதைகள், 1999)
  • "மு.வ. நினைவு மலர்" (1994)
  • "இளவேனில்" (நாவல். 2002)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=அ._சுப்ரமணியம்&oldid=6633" இருந்து மீள்விக்கப்பட்டது