அ. இளங்கோவன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அ. இளங்கோவன் (பிறப்பு:1942 ஜூலை 5) பலகலைக்கழகத்தின் கட்டமைப்புத் துறையின் பேராசிரியரும் தமிழில் 1960 களில் இருந்தே அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் படைக்க முனைந்த முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். இவர் பொறியியல் இளவல் பாடத்திட்டத்தில் கட்டிடப் பொறியியல் சார்ந்த ஐந்து பாட நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் இந்நூல்களை வெளியிட்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்தி தமிழில் பொறியியல் பயின்ற அண்ணா பலகலைக்கழக மாணவருக்குப் பாடம் எடுத்துள்ளார். இவர் அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய களஞ்சியம் காலாண்டிதழின் ஆசிரியக் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.
இளமை
இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள எஃகாலைக்கு அருகில் அமைந்த திருமலைகிரியில் சி. அப்பாவு என்பவருக்கும் கோவிந்தம்மாள் என்பவருக்கும் 1942 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 5 ஆம் நாளன்று பிறந்தார்.
பள்ளிக் கல்வி
இவர் தன் தொடக்கநிலைப் பள்ளிக் கல்வியைத் திருமலைகிரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கநிலைப் பள்ளியில் 1947 முதல் 1952 வரையில் படித்துள்ளார். அடுத்து தன் உயர்நிலைப் பள்ளிக் கல்வியைச் சேலம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 1952 முதல் 1958 வரையில் படித்துள்ளார். இவர் சேலம் நகராட்சிப் பள்ளிகளிலேயே பள்ளி இறுதியாண்டில் முதல் மாணவராகத் தேர்வுற்றுள்ளார்.சேலம் மவட்டத்தில் இரண்டாம் மாணவராகத் தேறியுள்ளார். அதற்காக அமைச்சர் கக்கன் அவர்களிடம் வெள்லிப் பதக்கமும் பெற்றுள்ளார்.பள்ளிப் படிப்பின்போது பல பேச்சு, கட்டுரை போட்டிகளில் கலந்துகொண்டு முதல்/இரண்டாம் பரிசுகள் பெற்றுள்ளார்.
கல்லூரிக் கல்வி
இவர் சேலம் நகர்க் கல்லூரியில் புகுமுக வகுப்பில் 1958-59 ஆம் ஆண்டில் பயின்றுள்ளார். பிறகு, கோவை, பூளைமேட்டில் அமைந்த பூ. சா. கோ. பொறியியல் கல்ல்ரியில் 1959 முதல் 1964 வரை கட்டிடப் பொறியியலில் பட்டப் படிப்பு முடித்து பொறியியல் இளவல் பட்டம் பெற்றுள்ளார். கல்லூரியில் படிக்கும்போதே தமிழார்வம் மிக்க இவர் கல்லூரி இறுதியாண்டில் மாணவர் மன்றங்களில் பங்கேற்று, பல உரைகளை ஆற்றியுள்ளார். குறிப்பாக, அட்சமும் தீர்க்கமும் ஒருங்கே காணல் எனும் லைப்பில் சிறப்புரை ஆற்றியுள்ளார். கல்லூரித் தமிழ் ஆண்டு மலருக்கு இவர் எழுதி வெளியிடப்பட்ட உலோகங்களும் தளர்ச்சியும் எனும் கட்டுரை முதல் பரிசு பெற்றுள்ளது. (ஆனால், இது அச்சேறவில்லை.)
கல்விப்பணி
இவர் கோவை அரசு பொறியியற் கல்லூரியில் கட்டிடத்துறையில் உதவி விரிவுரையாளராகச் சேர்ந்தார். அப்போது பொறியியல் என்னும் இதழைத் தமிழில் தம் நண்பர்களோடு இணைந்து வழிநடத்தியுள்ளார். இவர் அப்போது பூ.சா.கோ. பொறியியற் கல்லூரியில் கட்டகவியல் துறையில் பொறியியல் மூதறிவியல் பட்டத்தைப் பெற்றார். பிறகு கிண்டிப் பொறியியற் கல்லூரியில் கட்டகப் பொறியியல் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். இங்கே இவர் தன்முணைவர் பட்டத்தை கட்டகவியல் துறையில் பெற்றார். பின்னர் இங்கே இவர் இணைப்பேராசிரியராகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். இங்கு இவர் களஞ்சியம் காலாண்டு ஆய்விதழின் ஆசிரியர்க்குழுவின் தலைவராகச் செயலாற்றியுள்ளார். இவர் கட்டகக் கோட்பாடு சார்ந்த ஐந்து பொறியியல் நூல்களை இயற்றி வெளியிட்டார். இவை எந்த ஆங்கில நூலைக் காட்டிலும் புலமையும் தெளிவும் வாய்ந்த நூல்களாகும். இவரது முதற் பாடநூலான திண்ம விசையியல் மட்டுமே நுலாக வெளியிடப்பட்டது. மறற நான்கு நூல்களும் சில நூறு படிகள் மட்டுமே தமிழில் பயிலும் கட்டிடத்துறை இளம்பொறியியல் மாணவருக்காக வெளியிடப்பட்டன.
கலைச்சொல்லாக்கப் பணி
இவர் 1960 களில் இருந்து இன்றுவரை கலைச்சொல்லாக்கப்பணியில் ஈடுபட்டுவருகிறார். இவர் தமிழில் எண்ணற்ற கலைச்சொற்களை உருவாக்கிய பேராளுமை படைத்தவர். தமிழ்ப் பலகைக்கழகப் பொறியியல் துறைக் கலைச்சொல்லாக்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
களஞ்சியத் தொகுப்புப் பணி
இவர் அறிவியல் களஞ்சியத்தில் பல கட்டிடப் பொறியியல் கட்டுரைகளை எழுதியுள்ளார்ளதில் கட்டிடப் பொறியியல் துறை வல்லுனராக இர்ந்து பல கட்டிடப் பொறியியல் கட்டுரைகளின் பதிப்புப் பணியிலும் ஈடுபட்டுல்ளார். இவர் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட சுற்றுச்சூழல் களஞ்சியத்தின் இருதொகுதிகளை வெளியிடுவதில் முதன்மையான பங்காற்றியுள்ளார்.
இதழியல் பணி
கோவை அரசுப் பொறியியல் கல்லூரியின் பொறியியல் இதழப்பணி, அண்ணா பல்கலைக்கந்த்தின் களஞ்சிய இதழ்ப்பணி, திருச்சிப் பாரதிதாசன் பல்கலைக்கழக அறிவியல் தொழில்நுட்ப ஆய்விதழ்ப்பணி ஆகியன இவரது இதழ்ப்பணிகளில் முத்தாய்ப்பானவை ஆகும்.