அ. அய்யாசாமி
பேராசிரியர் அ.அய்யாசாமி (பிறப்பு: மார்ச் 1 1940, மறைவு: ஜூன் 16, 2019) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர். ஈரோடு மாவட்டம் புஞ்சைப் புளியம்பட்டி எனும் ஊரில் பிறந்தவர். பள்ளி ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும், கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியவர். முல்லைச்சரம், தாமரை, கல்கி, கணையாழி போன்ற இதழ்களில் கதை, கட்டுரை, கவிதைகள் என பல எழுதியுள்ளார். கதிரொளி, Leslie Amarson, A S Mee என்ற புனைபெயர்களில் கட்டுரைகளும், சுபத்ரா அய்யாசாமி என்ற பெயரில் சிறுகதைகளும், வித்தகன் என்ற புனைபெயரில் தாமரை இதழில் விமர்சனக் கட்டுரைகளையும் எழுதினார்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
அ. அய்யாசாமி |
---|---|
பிறந்ததிகதி | மார்ச்சு 1, 1940 (அகவை 83) |
பிறந்தஇடம் | ஈரோடு மாவட்டம் ,புஞ்சைப் புளியம்பட்டி |
இறப்பு | மறைவு: ஜூன் 16, 2019 |
தேசியம் | இந்தியா |
அறியப்படுவது | எழுத்தாளர் |
அகில இந்திய வானொலியிலும் பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார், அறிவியல் நெடுந்தொடரை எழுதியிருக்கிறார். ஆங்கிலம் தமிழ் இரு மொழிகளிலும் புலமைபெற்றவர், பல மொழிபெயர்ப்புகளையும் செய்திருக்கிறார்.
இவர் எழுதிய வைக்கம் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாடகம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
2010-இல் தமிழக அரசின் திரு. வி. க. விருதையும், 2016-இல் தி. மு. க. முரசொலி அறக்கட்டளையின் பெரியார் விருதையும், தமிழ்க் கவிஞர் மன்றத்தின் இலக்கியப் பேரொளி விருதையும் பெற்றவர்.
எழுதிய நூல்கள்
- வைக்கம் - கவிதை நாடகம் - விழிகள் பதிப்பகம் (தமிழ்நாடு அரசு பரிசுபெற்றது)
- தென்னகத்தின் எழுச்சி - கட்டுரை தொகுப்பு - விழிகள் பதிப்பகம் (தமிழ்நாடு அரசு பரிசுபெற்றது)
- அண்ணா நாடகங்களில் எதிர்நிலை மாந்தர்
- அண்ணா நெடுங்கதைகளில் மகளிர் நிலை
- அண்ணாவும் திராவிட இயக்கமும் -
- நாகானந்தம் - கவிதை நாடகம் - விழிகள் பதிப்பகம் (வடமொழி மூலம் - மாமன்னர் ஹர்ஷ வர்தனன்)
- மனித வாழ்வை அமைத்த கண்டுபிடிப்பாளர்கள் - தமிழ் மொழிபெயர்ப்பு (ஆங்கில மூலம் பேராசிரியர் கே.வி. கோபாலகிருஷ்ணன்) - நேஷனல் புக் டிரஸ்ட்
- A history of DMK (Published by DMK)
- Periyar Self-Respect (Published by Dravidar Kazhagam)