அஸ்ரப் சிஹாப்தீன்

அஸ்ரப் சிஹாப்தீன், இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், (பிறப்பு: பெப்ரவரி 14 1960) இலங்கை வத்தளை மாபோலை, ஸ்ரீ சித்தார்த்த மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு எழுத்தாளரும், கவிஞரும், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் செயலாளரும், யாத்ரா சிற்றிதழ் ஆசிரியருமாவார். இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் என்பவற்றில் ஒலி - ஒளிபரப்பளராகவும், செய்தி அறிவிப்பாளராகவும் பணியாற்றியவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், உலகச் சிற்றிதழ்ச் சங்க இலங்கைக் கிளை ஆகியவற்றின் உப தலைவராகக் கடமையாற்றியவர்.

அஸ்ரப் சிஹாப்தீன்
இயற்பெயர் அஸ்ரப் சிஹாப்தீன்
பிறப்பு அஸ்ரப் சிஹாப்தீன்
பணி ஒலி-ஒளிபரப்பாளர், பதிப்பாசிரியர்

எழுதிய நூல்கள்

  • காணாமல் போனவர்கள் - 1999
  • உன்னை வாசிக்கும் எழுத்து - நெடுங்கவிதை மொழிபெயர்ப்பு - 2007
  • என்னைத் தீயில் எறிந்தவள் - 2008 (அரச இலக்கிய விருது (2008)பெற்றது.
  • ஒரு குடம் கண்ணீர்
  • ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழம் (அறபுமொழிக்கதைகளின் மீள்மொழிவு)
  • தீர்க்க வர்ணம்
  • புள்ளி (சிறுவர் கதை) - 2007
  • புல்லுக்கு அலைந்த மில்லா (சிறுவர் கதை) - 2009
  • கறுக்கு-மொறுக்கு - முறுக்கு (சிறுவர் கதை) - 2009
  • ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை (பயண அனுபவங்கள்) - 2009

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

  • இலங்கை சாஹித்திய விருது
  • தமிழ்மாமணி விருது

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
  • http://www.tamilauthors.com
"https://tamilar.wiki/index.php?title=அஸ்ரப்_சிஹாப்தீன்&oldid=15233" இருந்து மீள்விக்கப்பட்டது