அவிசாவளை
Coordinates: 6°57′11″N 80°13′06″E / 6.95306°N 80.21833°E
அவிசாவளை இலங்கையின் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது மாவட்டத் தலைநகரான கொழும்புக்கு மேற்குத் திசையில் 52 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. மேல் மாகாணத்தின் கிழக்கு மூலையில், சபரகமுவா மாகாணத்துடனான எல்லையில் காணப்படுகிறது. இந்நகரம் இலங்கையின் முக்கிய நதிகளில் ஒன்றான களனி நதியின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்நகரமானது கொழும்பையும், கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கும் ஏ4 பெருந்தெருவில் 52 கி.மீ. தூரத்தில் காணப்படுகிறது. இங்கிருந்து, அவிசாவளையை , அட்டன் வழியாக, மத்திய மாகாணத்தின் முக்கிய நகரமான நுவரெலியாவுடன் இணைக்கும் ஏ7 பெருந்தெரு ஆரம்பிக்கிறது.
அவிசாவளை | |
மாகாணம் - மாவட்டம் |
மேல் மாகாணம் - கொழும்பு |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 134 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் தொகை (2001) |
21,597 |
குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 10700 - +9436 - WP |
அவிசாவளை | |
---|---|
ஆள்கூறுகள்: 6°57′11″N 80°13′06″E / 6.95306°N 80.21833°E |
இந்நகரத்தின் நகரசபையின் உத்தியோகபூர்வப் பெயர் சீதாவாகை நகரசபையாகும். நகரைச் சூழவுள்ள கிராமிய பிரதேசங்கள் சீதாவாக்கைப் பிரதேச சபையால் நிர்வகிக்கப்படுகிறது. இப்பெயர், இலங்கையில் 16 ஆம் நூற்றாண்டளவில் இப்பிரதேசத்தில் காணப்பட்ட சீதாவாக்கை இராச்சியத்தின் காராணமான வழங்கு பெயராகும். நகரத்துக்கு அருகில் பழைய இராச்சியத்தின் இடிபாடுகளை இப்போதும் காணலாம்.
புவியியலும் காலநிலையும்
இது இலங்கையின் புவியியல் பிரிவான சபரகமுவா குன்றுகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 134 மீற்றர்[1] உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். அவிசாவளை இலங்கையின் ஈரவலயத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் தென்மேற்கில் காணப்படும் ஏனைய பிரதேசங்களைப் போலவே, பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேல் பருவக்காற்றின் மூலம் பெருகின்றது, 3500-5000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
மக்கள்
இது சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பிரதேசமாகும். நகரைச் சுற்றிக் காணப்படும் பிரதேசங்களிலேயே அதிக மக்கள் வாழ்கின்றனர்.
இன அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் பின்வருமாறு:[2]
மொத்தம் | சிங்களவர் | இலங்கைத் தமிழர் | இந்தியத் தமிழர் | முஸ்லிம்கள் | பரங்கியர் | ஏனைய |
---|---|---|---|---|---|---|
21,597 | 17,668 | 1,958 | 1,409 | 494 | 30 | 38 |
சமய அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் வருமாறு:[3]
மொத்தம் | பௌத்தர் | இந்து | இஸ்லாம் | கத்தோலிக்கம் | ஏனைய கிறிஸ்தவம் | ஏனைய |
---|---|---|---|---|---|---|
21,597 | 16,806 | 2,567 | 509 | 1,285 | 411 | 19 |